என் மலர்

  செய்திகள்

  கொடைக்கானலில் குடியிருப்பு பகுதியில் புகுந்த 2 பாம்புகள்
  X

  கொடைக்கானலில் குடியிருப்பு பகுதியில் புகுந்த 2 பாம்புகள்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  கொடைக்கானலில் குடியிருப்பு பகுதியில் 2 பாம்புகள் புகுந்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

  கொடைக்கானல்:

  கொடைக்கானலில் தற்போது கடுமையான வெயில் காலம் நிலவி வருகிறது. அவ்வப்போது குளிர்ந்த காற்றுடன் சாரல் மழைபெய்து செல்கிறது.

  ஆனால் இந்த மழையின் அனுபவம் சில நொடிகள் மட்டுமே உள்ளது. அதன்பிறகு மீண்டும் வெயிலின் தாக்கம் அதிகரிக்கிறது. இதுபோன்ற பருவநிலை மாற்றத்தால் கொடைக்கானலில் பொதுமக்கள் மட்டுமின்றி வன விலங்குகளும் பாதிக்கப்பட்டு வருகின்றன.

  நேற்று கொடைக்கானல் நகர் பகுதியான மக்கள் குடியிருப்புகள் அதிகம் உள்ள பில்லீஸ்வில்லா தெருவில் 2 பாம்புகள் ஜோடியாக புகுந்தது.

  இதனை பார்த்ததும் அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்து அதனை விரட்ட முயன்றனர். மேலும் இது குறித்து தீயணைப்புத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் விரைந்து வந்து நீளமான 2 மலைச்சாரை பாம்புகளை லாவகமாக பிடித்தனர்.

  பின்னர் அந்த பாம்புகள் வனத்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டது. அவர்கள் அந்த பாம்புகளை வனப்பகுதிக்குள் கொண்டு விட்டனர். கொடைக்கானல் பகுதியில் காட்டெருமை, மான், சிறுத்தை, யானை போன்ற வன விலங்குகள் அடிக்கடி இடம் பெயர்ந்து பொதுமக்களை அச்சுறுத்தி வந்த நிலையில் தற்போது 2 பாம்புகள் பிடிபட்டது மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியது.

  Next Story
  ×