என் மலர்

  செய்திகள்

  தேனி அருகே வீட்டை விட்டு சென்ற கல்லூரி மாணவி மாயம்
  X

  தேனி அருகே வீட்டை விட்டு சென்ற கல்லூரி மாணவி மாயம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  தேனி அருகே வீட்டை விட்டு சென்ற கல்லூரி மாணவி மாயமானார். இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
  தேனி:

  தேனி அருகே சின்னமனூர் சீலையம்பட்டி கந்தசாமி செட்டியார் தெருவை சேர்ந்தவர் மணிமுத்து. இவரது மகள் சந்தியா (வயது17). இவர் தேனியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.காம் சி.ஏ., முதலாம் ஆண்டு படித்து வருகிறார்.

  சம்பவத்தன்று சந்தியா தம்பியுடன் கம்ப்யூட்டர் பழுது பார்க்க செல்வதாக வீட்டில் கூறி உள்ளார். வெகுநேரமாகியும் சந்தியா வீடு திரும்பாததால் அவரது தந்தை மணிமுத்து அக்கம் பக்கம் மற்றும் உறவினர்கள் வீடுகளில் தேடி பார்த்துள்ளார். எங்கு தேடியும் கிடைக்காததால் மணிமுத்து சின்னமனூர் போலீசில் புகார் அளித்தார்.

  புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து மாயமான கல்லூரி மாணவி சந்தியாவை போலீசார் தேடி வருகின்றனர்.
  Next Story
  ×