என் மலர்tooltip icon

    செய்திகள்

    மேட்டூர் அணை நீர்மட்டம் 69.78 அடியாக குறைந்தது
    X

    மேட்டூர் அணை நீர்மட்டம் 69.78 அடியாக குறைந்தது

    நீர் வரத்தை விட தண்ணீர் திறப்பு கூடுதலாக உள்ளதால் மேட்டூர் அணை நீர்மட்டம் 69.84 அடியில் இருந்து 69.78 அடியாக குறைந்தது.
    மேட்டூர்:

    காவிரி நீர் பிடிப்பு பகுதியில் மழை இல்லாததால் மேட்டூர் அணைக்கு வரும் நீர்வரத்து நாளுக்கு நாள் சரிந்து வருகிறது. நேற்று அணைக்கு 107 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. இன்றும் இதே அளவு தண்ணீர் வருகிறது. அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக 1000 கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. நீர் வரத்தை விட தண்ணீர் திறப்பு கூடுதலாக உள்ளதால் நீர்மட்டம் 69.84 அடியில் இருந்து 69.78 அடியாக குறைந்து உள்ளது.

    தொடர்ந்து நீர்வரத்து குறைந்து வரும் பட்சத்தில் அணையின் நீர்மட்டம் மேலும் குறைய வாய்ப்பு உள்ளது.

    Next Story
    ×