என் மலர்
செய்திகள்

செய்யாறு அருகே குடிநீர் கேட்டு பெண்கள் சாலை மறியல்
செய்யாறு:
செய்யாறு அருகே உள்ள தண்டரையில் சுமார் 200-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதிக்கு கடந்த 2 மாதங்களாக குடிநீர் முறையாக வழங்கபடவில்லை. இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பல முறை முறையிட்டும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கபடவில்லை என்று கூறபடுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி பெண்கள் 100-க்கும் மேற்பட்டோர் செய்யாறு ஆரணி செல்லும் சாலையில் திடீர் சாலை மறியல் செய்தனர். இது குறித்து தகவலறிந்த முன்னாள் அமைச்சர் முக்கூர் சுப்பிரமணியன் சம்பவ இடத்திற்கு வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்தை நடத்தினார்.
அப்போது பெண்கள் எங்கள் பகுதிக்கு உடனடியாக குடிநீர் பிரச்சனையை தீர்க்க வேண்டும் என்று கூறினர். இது குறித்து சம்பந்தபட்ட அதிகாரிகளிடம் பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாக உரிதியளித்தார்.
இதையடுத்து பெண்கள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.