என் மலர்
செய்திகள்

கறம்பக்குடி அருகே குடிசை வீடு தீயில் எரிந்து நாசம்
கறம்பக்குடி அருகே சமையல் செய்த போது திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் குடிசை வீடு எரிந்த சேதம் அடைந்தன. இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஆலங்குடி:
புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே உள்ள கெண்டையன்பட்டியை சேர்ந்தவர் அபுபக்கர். இவர் தள்ளுவண்டியில் காய்கறி வியாபாரம் செய்து வருகிறார். அபுபக்கர் தனது மனைவி மற்றும் மாமியார் சலீமா ஆகியோருடன் குடிசை வீட்டில் வசித்து வந்தார்.
சம்பவத்தன்று சமையல் செய்து கொண்டிருந்த போது திடீரென தீப்பற்றியது. தீ மளமளவென பரவி குடிசை வீடு முழுவதும் பரவியது. வீட்டிற்குள் மாட்டிய சலீமாவை அருகில் இருந்தவர்கள் காயமின்றி மீட்டனர்.
தகவலறிந்து வந்த கறம்பக்குடி தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர். அதற்குள் வீட்டில் இருந்த டி.வி.,பீரோ, குளிர்சாதன பெட்டி, பத்து பவுன் தங்க நகை, இரு சக்கர வாகனம் உள்பட அனைத்து பொருட்களும் தீயில் எரிந்து கருகின. இந்த தீ விபத்து குறித்து மழையூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story






