என் மலர்tooltip icon

    செய்திகள்

    சேதராப்பட்டில் மினி வேன் டிரைவர் மீது கொலை வெறி தாக்குதல்
    X

    சேதராப்பட்டில் மினி வேன் டிரைவர் மீது கொலை வெறி தாக்குதல்

    சேதராப்பட்டில் மினி வேன் டிரைவர் மீது கொலை வெறி தாக்குதல் நடத்திய கும்பலை போலீசார் தேடி வருகிறார்கள்.

    சேதராப்பட்டு:

    சேதராப்பட்டு புதிய காலனியை அடுத்த திடீர் நகரை சேர்ந்தவர் முருகன். இவரது மகன் விநாயக முருகன் (வயது 24). நேற்று மாலை இவர் அந்த பகுதியில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டு இருந்தார்.

    அப்போது அதே பகுதியை சேர்ந்த தனியார் நிறுவன ஊழியர் சங்கர், ராமன், லட்சுமணன் மற்றும் மணிகண்டன் ஆகியோர் விநாயக முருகனை வழி மறித்து தகராறு செய்தனர்.

    இதுபற்றி விநாயக முருகன் தனது அண்ணன் முத்துக்குமாருக்கு போன் செய்து வரவழைத்தார். இதையடுத்து முத்துகுமார் அந்த கும்பலை தட்டிக்கேட்டார்.

    இதனால் ஆத்திரம் அடைந்த அந்த கும்பல் முத்துக்குமாரை இரும்பு கம்பி உள்பட பயங்கர ஆயுதங்களால் கொலை வெறி தாக்குதல் நடத்தியது.

    இதில் படுகாயம் அடைந்த முத்துக்குமார் புதுவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

    இது குறித்த புகாரின் பேரில் சேதராப்பட்டு போலீசார் வழக்குபதிவு செய்து சங்கரை கைது செய்தனர். மற்ற 3 பேரை தேடி வருகிறார்கள்.

    Next Story
    ×