என் மலர்

  செய்திகள்

  கியாஸ் சிலிண்டர் வெடித்து படுகாயம் அடைந்த ஓய்வு பெற்ற மின்வாரிய ஊழியர் பலி
  X

  கியாஸ் சிலிண்டர் வெடித்து படுகாயம் அடைந்த ஓய்வு பெற்ற மின்வாரிய ஊழியர் பலி

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  கோவை அருகே கியாஸ் சிலிண்டர் வெடித்து படுகாயம் அடைந்த ஓய்வு பெற்ற மின்வாரிய ஊழியர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
  கோவை:

  கோவை ஆர்.எஸ்.புரம் அருகே உள்ள காமராஜபுரத்தை சேர்ந்தவர் சின்னராஜ் (வயது 77). ஓய்வு பெற்ற மின்வாரிய ஊழியர்.

  இவர் நேற்று காலை 5 மணியளவில் வழக்கம் போல பால் வாங்கி வந்து சமையல் அறைக்கு சென்றார்.

  அப்போது அங்கு சிலிண்டரில் கியாஸ் கசிவு ஏற்பட்டு அறை முழுவதும் பரவி இருந்தது. இது தெரியாமல் சின்னராஜ் அறையில் இருந்த சுவிட்ச்சை போட்டார். கண் இமைக்கும் நேரத்தில் சிலிண்டர் வெடித்து சிதறியது.

  இதில் சின்னராஜ் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடினார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

  அங்கு அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வந்தனர். ஆனால் சிகிச்சை பலனளிக்காமல் நேற்று இரவு சின்னராஜ் பரிதாபமாக இறந்தார்.

  இது குறித்து ஆர்.எஸ்.புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். #tamilnews
  Next Story
  ×