என் மலர்
செய்திகள்

தலைமைச் செயலக ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை - தலைமை செயலர் எச்சரிக்கை
ஜாக்டோ-ஜியோவுக்கு ஆதரவாக தலைமைச் செயலக ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தலைமை செயலாளர் எச்சரிக்கை விடுத்துள்ளார். #jactogeostrike #JactoGeo #TNGovt
சென்னை:
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் கடந்த 22ம் தேதி முதல் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இவர்களுக்கு ஆதரவாக, தலைமைச் செயலக ஊழியர்களும் நாளை போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக அறிவித்துள்ளனர்.
இந்நிலையில், ஜாக்டோ-ஜியோவுக்கு ஆதரவாக தலைமைச் செயலக ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு எச்சரித்துள்ளது.
இதுதொடர்பாக, தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில், தலைமைச் செயலக ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். அரசு ஊழியர்களுக்கு நாளை விடுப்பு கிடையாது.
ஜாக்டோ-ஜியோவுக்கு ஆதரவாக தலைமைச் செயலக ஊழியர்கள் நாளை போராட்டத்தில் ஈடுபட்டால் ஊதியம் வழங்கப்படாது. போராட்டத்தில் ஈடுபடும் தலைமைச் செயலக ஊழியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. #jactogeostrike #JactoGeo #TNGovt
Next Story






