
மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான கொடநாடு பங்களாவில் நடந்த காவலாளி கொலை, அதில் தொடர்புடையவர்கள் என்று குற்றம் சாட்டப்பட்டவர்களின் மரணம் ஆகியவை குறித்து நாரதா நியூஸ் என்ற ஆன்-லைன் செய்தி நிறுவனம், கடந்த 11-ந்தேதி ஆவணப்படம் ஒன்றை வெளியிட்டது.
இதையடுத்து அந்த செய்தி நிறுவனத்தின் ஆசிரியர் மேத்யூ சாமுவேல் உள்பட பலர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

அப்போது, அரசு தரப்பில் மாநில தலைமை குற்றவியல் அரசு வக்கீல் ஏ.நடராஜன், மனுதாரர் சார்பில் மூத்த வக்கீல் என்.ஆர்.இளங்கோ ஆகியோர் ஆஜராகி வாதிட்டனர்.
இதையடுத்து இந்த வழக்கு விசாரணைக்கு ஏற்பதா? வேண்டாமா? என்பது குறித்து தீர்ப்பு அளிப்பதாக கூறி நீதிபதி வழக்கை தள்ளிவைத்தார். இந்த நிலையில், இந்த தீர்ப்பை இன்று காலையில் நீதிபதி ஏ.ஆனந்தவெங்கடேஷ் பிறப்பித்தார்.
அதில், ‘தன் மீதான வழக்கை ரத்து செய்யக் கோரி மேத்யூ சாமுவேல் தாக்கல் செய்த மனுவை விசாரணைக்கு எடுத்துக் கொள்கிறேன். மேத்யூ சாமுவேல் தாக்கல் செய்துள்ள இந்த வழக்கிற்கு ஒரு வாரத்துக்குள் சென்னை போலீஸ் கமிஷனர் பதில் அளிக்க வேண்டும். அதுவரை, மேத்யூ மீது பதிவு செய்யப்பட்டுள்ள வழக்கின் விசாரணைக்கு தடை விதிக்கிறேன்’ என்று நீதிபதி கூறியுள்ளார். #MathewSamuel #MadrasHC #Kodanadissue