என் மலர்
செய்திகள்

தமிழக பகுதியில் கேரள மருத்துவ கழிவுகளை கொட்டிய 4 பேர் கைது
கேரள மருத்துவ கழிவுகளை ஏற்றிவந்து தமிழக பகுதிகளில் கொட்டிய 4 பேர் கைது செய்யப்பட்டனர். கழிவுகளை ஏற்றி வந்த லாரியும் பறிமுதல் செய்யப்பட்டது.
பொள்ளாச்சி:
பொள்ளாச்சி அடுத்த அம்பராம்பாளையத்தில் இருந்து வக்கம்பாளையம் வரை சாலையின் இரு பகுதிகளி லும் சாக்கு மூட்டைகளில் கழிவுகள் அதிகாலை நேரத்தில் ஒரு லாரி கொட்டிச் செல்வதை பொது மக்கள் பார்த்துள்ளனர். இதையடுத்து, லாரியை சிறைபிடித்த பொதுமக்கள் ஆனைமலை போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
சப்-இன்ஸ்பெக்டர் கதிரவன், ஏட்டு காளிமுத்து மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று லாரியின் உரிமையாளர் பொள்ளாச்சியை சேர்ந்த அருண் ராஜ்(30), பழனியை சேர்ந்த ஓட்டுனர் தில்லையப்பன்(52), உதவியாளர்கள் அம்பராம் பாளையத்தை சேர்ந்த ராமசாமி(55), காளிமுத்து(52) ஆகியோரை கைது செய்தது டன், லாரியையும் பறிமுதல் செய்தனர்.
Next Story






