என் மலர்

  செய்திகள்

  திருவாரூரில் பெண்ணிடம் 4½ பவுன் செயின் பறிப்பு- இருவா் கைது
  X

  திருவாரூரில் பெண்ணிடம் 4½ பவுன் செயின் பறிப்பு- இருவா் கைது

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  திருவாரூரில் கணவருடன் சென்ற பெண்ணிடம் 4½ பவுன் செயின் பறிப்பில் ஈடுபட்ட இருவரை போலீசார் கைது செய்தனர்.
  திருவாரூர்:

  திருவாரூர் மாவட்டம் திருநெய்பேர் கிராமத்தை சேர்ந்தவர் செல்வராஜ். இவரது மனைவி ஜெயசுதா (வயது40). வேளாண் விற்பனை மையத்தில் பணியாற்றி வருகிறார்.

  கணவன், மனைவி இருவரும் மோட்டார் சைக்கிளில் நேற்று மாலை திருவாரூர் வடக்குவீதியில் உள்ள ஒரு கடைக்கு சென்று விட்டு திரும்பினர். அப்போது புதுத்தெரு பகுதியில் சென்றபோது மோட்டார் சைக்கிளில் திடீரென ஹெல்மெட் அணிந்து வந்த மர்ம நபர்கள் ஜெயசுதா அணிந்திருந்த 4½ பவுன் செயினை பறித்துக் கொண்டு தப்பி சென்றனர்.

  ஜெயசுதா இதுபற்றி போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். போலீசார் வாகன சோதனையில் விளமல் பகுதியில் ஈடுபட்டிருந்தபோது அங்கு மோட்டார் சைக்கிளில் வேகமாக சென்ற 2 பேரை விரட்டி சென்று தண்டலை பகுதியில் மடக்கிப் பிடித்தனர்.

  பின்னர் 2 பேரையும் திருவாரூர் நகர போலீசில் ஒப்படைத்தனர். இருவரும் திருநெல்வேலி பகுதியைச் சேர்ந்தவர்கள் என்பது போலீசாரின் விசாரணையில் தெரிய வந்தது. செயின் பறிப்பு சம்பவத்தில் காயமடைந்த ஜெயசுதா அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
  Next Story
  ×