என் மலர்
செய்திகள்

18 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்துவது குறித்து ஏப்ரல் 24க்குள் முடிவு - தேர்தல் ஆணையம்
தமிழகத்தில் 18 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்துவது குறித்து ஏப்ரல் 24-க்குள் முடிவு செய்யப்படும் என உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் தேர்தல் ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது. #ECI #Bypoll #MaduraiHighCourt
மதுரை:
எம்.எல்.ஏ.க்கள் தகுதியிழப்பு செய்யப்பட்டதால் காலியாக உள்ள 18 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடத்த தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கு விசாரணையில் நீதிபதிகள், 18 தொகுதிகளில் இடைத்தேர்தல் நடத்த ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை? இடைத்தேர்தல் எப்போது நடத்தப்படும்? என்பதை இந்த கோர்ட்டு அறிய விரும்புகிறது. இந்த வழக்கு குறித்து இந்திய தலைமை தேர்தல் கமிஷன், தமிழக தலைமை தேர்தல் ஆணையர் ஆகியோர் பதில் அளிக்கும்படி நோட்டீஸ் அனுப்ப நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும் விசாரணையை வரும் 22-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
இந்நிலையில், இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ள பதிலில், தமிழகத்தில் 18 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்துவது குறித்து ஏப்ரல் 24-ம் தேதிக்குள் முடிவு செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. #ECI #Bypoll #MaduraiHighCourt
Next Story






