என் மலர்
செய்திகள்

வாலாஜாவில் எரிசாராயம் கடத்திய 3 பேர் குண்டர் சட்டத்தில் கைது
வாலாஜாவில் எரி சாராயம் கடத்தி வந்த 3 பேர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர்.
வாலாஜா:
வாலாஜா மதுவிலக்கு போலீசார் கடந்த மாதம் வேனில் கடத்தி வரப்பட்ட 6800 லிட்டர் எரிசாராயத்தை பறிமுதல் செய்தனர்.
இதுதொடர்பாக கீழ்விஷாபுரத்தை சேர்ந்த விஜயகுமார் (48). தவமணி (28). ஆம்பூர் ரங்காபுரத்தை சேர்ந்த கோபி (47) ஆகியோரை கைது செய்தனர்.
விசாரணையில் இவர்கள் தொடர்ந்து எரிசாராயம் கடத்தி வந்தது தெரியவந்தது. 3 பேர் மீதும் குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க போலீஸ் சூப்பிரண்டு பிரவேஷ்குமார் பரிந்துரை செய்தார்.
அதனை ஏற்று கலெக்டர் ராமன் 3 பேரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார். அதன்பின்னர் 3 பேர் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டது.
Next Story






