search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பேட்ட, விஸ்வாசம் படங்களின் சிறப்பு காட்சிகளுக்கு அனுமதி இல்லை- அமைச்சர் கடம்பூர் ராஜூ
    X

    பேட்ட, விஸ்வாசம் படங்களின் சிறப்பு காட்சிகளுக்கு அனுமதி இல்லை- அமைச்சர் கடம்பூர் ராஜூ

    பேட்ட, விஸ்வாசம் படங்களின் சிறப்பு காட்சிகளுக்கு அனுமதி கிடையாது என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறினார். #Petta #Viswasam #MinisterKadamburRaju
    விருதுநகர்:

    ரஜினியின் பேட்ட, அஜித்தின் விஸ்வாசம் போன்றவை பொங்கல் விருந்தாக நாளை (10-ந்தேதி) வெளியாக உள்ளனன. இந்த படத்தின் சிறப்பு காட்சிகள் அறிவிக்கப்பட்டு ரசிகர்கள் முன்பதிவு செய்துள்ளனர்.

    இந்த நிலையில் பேட்ட, விஸ்வாசம் படங்களின் சிறப்பு காட்சிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. விருதுநகரில் இன்று நிருபர்களை சந்தித்த அமைச்சர் கடம்பூர் ராஜூ இதனை தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது:-

    பேட்ட, விஸ்வாசம் படங்கள் நாளை திரைக்கு வர உள்ளது. இந்த படங்களின் சிறப்பு காட்சிகளுக்கு அனுமதி இல்லை. தியேட்டர்களில் சரியான கட்டணம் வசூலிக்கப்பட வேண்டும். கூடுதலாக வசூலித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

    முதல் தடவையாக ரூ. 50 ஆயிரமும், இரண்டாம் கட்டமாக ரூ. 1 லட்சமும் அபராதம் விதிக்கப்படும். தொடர்ந்து கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்டால் திரையரங்கு உரிமம் ரத்து செய்யப்படும்.

    பொது பிரிவினருக்கு 10 சதவீத இட ஒதுக்கீட்டை முன்னாள் முதல்வர் ஜெயலலிதா எதிர்த்து வந்தார். அதே நிலைப்பாடுதான் தற்போதைய தமிழக அரசுக்கும் உள்ளது.


    ஒவ்வொரு பிரச்சனையிலும் ஜெயலலிதா என்ன நிலைப்பாடு கொண்டிருந்தாரோ அதையே நாங்களும் கடைப்பிடிக்கிறோம். இதனால்தான் பாராளுமன்றத்தில் தம்பிதுரை வெளிநடப்பு செய்தார். மத்திய அரசுக்கு அடிபணிந்து நாங்கள் நடக்க மாட்டோம்.

    ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தின் முழு உத்தரவு கிடைத்த பிறகே தமிழக அரசு முடிவெடுக்கும்.

    இவ்வாறு அவர் கூறினார். #Petta #Viswasam #MinisterKadamburRaju
    Next Story
    ×