என் மலர்
செய்திகள்

ரூ.30500 கோடி தொழில் முதலீட்டுக்கு தமிழக அமைச்சரவை ஒப்புதல்
தமிழகத்தில் ரூ.30,500 கோடி தொழில் முதலீடு செய்வதற்கு அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. #GIM2019 #TNCabinet #TNGovt
சென்னை:
தலைமைச் செயலகத்தில் இன்று தமிழக அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்ற இந்த அமைச்சரவை கூட்டத்தில் உலக முதலீட்டாளர் மாநாடு, வானூர்தி பூங்கா உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.

உலக முதலீட்டாளர்கள் பங்கேற்கும் இரண்டாவது மாநாடு சென்னையில் வரும் 23 மற்றும் 24 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது. #GIM2019 #TNCabinet #TNGovt

இந்த கூட்டத்தில் ரூ.30,500 கோடி தொழில் முதலீட்டுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. ரூ.30,500 கோடி முதலீட்டில் தொடங்கப்படும் 14 தொழில் நிறுவனங்களால் 18 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story