என் மலர்

    செய்திகள்

    கல்பாக்கம் அருகே கார் மோதி முதியவர் பலி
    X

    கல்பாக்கம் அருகே கார் மோதி முதியவர் பலி

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    கல்பாக்கம் அருகே மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் சிகிச்சை பலனின்றி முதியவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
    மாமல்லபுரம்:

    கல்பாக்கத்தை அடுத்த புதுப்பட்டினம் பகுதியை சேர்ந்தவர் அல்போன்ஸ் (வயது 64). இவர் அதே பகுதியில் 2 பேருடன் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது பின்னால் வந்த கார் திடீரென மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

    இதில் படுகாயம் அடைந்த அல்போன்சை மீட்டு குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.

    விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×