என் மலர்

  செய்திகள்

  வருத்தம் தெரிவித்ததால் ஓ.பி.எஸ். சகோதரர் ஓ.ராஜா மீண்டும் அ.தி.மு.க.வில் சேர்ப்பு
  X

  வருத்தம் தெரிவித்ததால் ஓ.பி.எஸ். சகோதரர் ஓ.ராஜா மீண்டும் அ.தி.மு.க.வில் சேர்ப்பு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  அ.தி.மு.க.வில் இருந்து சமீபத்தில் நீக்கப்பட்ட துணை முதலமைச்சர் ஓ.பி.எஸ். சகோதரர் ஓ.ராஜா இன்று மீண்டும் அக்கட்சியில் சேர்க்கப்பட்டுள்ளார். #OPSbrothersuspended #OPSbrother #OPSbrotherinducted #AIADMK
  சென்னை:

  அ.தி.மு.க.வின் ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்-அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வத்தின் தம்பி, ஓ.ராஜா. பெரியகுளம் நகர மன்ற முன்னாள் தலைவரான இவர், அ.தி.மு.க.வில் உறுப்பினராக இருந்தார். கட்சியில் எந்த பதவியும் வகிக்காவிட்டாலும் தேனி, மதுரை பகுதியில் செல்வாக்கு மிகுந்தவராக வலம் வந்தார்.
   
  இவரை அ.தி.மு.க.வில் இருந்து நீக்கி கட்சித்தலைமை சமீபத்தில் நடவடிக்கை எடுத்தது.

  முன்னதாக, மதுரை மாவட்ட பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்க ஒன்றிய தலைவர் பதவிக்கு அவர் மனுதாக்கல் செய்திருந்தார். இது அ.தி.மு.க.வினருக்கு பிடிக்காததால், கட்சிக்குள் பூசல் வெடித்தது. எனினும் மதுரை மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்க ஒன்றிய தலைவராக ஓ.ராஜா தேர்வானதாக கடந்த 19-ம் தேதி அறிவிப்பு வெளியானது.

  இந்த அறிவிப்பு வெளியான சில நிமிடங்களிலேயே, அ.தி.மு.க.வின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பதவிகளில் இருந்தும் அவரை நீக்குவதற்கான அறிவிப்பை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், ஓ.ராஜாவின் அண்ணனும், துணை முதல்-அமைச்சருமான ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் வெளியிட்டனர்.

  ஜெயலலிதா உயிருடன் இருந்த நேரத்தில், ஓ.ராஜா மீது கொலை வழக்கு புகார் எழுந்ததை தொடர்ந்து கட்சியில் இருந்து ஓரம் கட்டப்பட்டு இருந்தார். ஜெயலலிதா மறைவுக்கு பிறகு ஓ.பன்னீர்செல்வம் ஒருங்கிணைப்பாளராக ஆன நேரத்தில், மதுரை, தேனி மாவட்ட அ.தி.மு.க.வில் ஓ.ராஜாவின் தலையீடு அதிகரித்தது. இதன் காரணமாக அவர் நீக்கப்பட்டுள்ளதாக கட்சி வட்டாரம் தெரிவித்தது.

  ஓ.பன்னீர் செல்வமே தனது தம்பியை கட்சியில் இருந்து நீக்கியது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

  இந்நிலையில், தனது செயலுக்காக ஓ.ராஜா நேரிலும், கடிதம் மூலமாகவும் வருத்தம் தெரிவித்ததால் அவரை மீண்டும் கட்சியில் இணைத்து கொண்டதாக அ.தி.மு.க. தலைமை இன்று வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. #OPSbrothersuspended #OPSbrother #OPSbrotherinducted #AIADMK 
  Next Story
  ×