என் மலர்

  செய்திகள்

  வியாசர்பாடியில் கத்தியுடன் சுற்றித்திரிந்த வாலிபர் கைது
  X

  வியாசர்பாடியில் கத்தியுடன் சுற்றித்திரிந்த வாலிபர் கைது

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  வியாசர்பாடியில் கத்தியுடன் சுற்றித்திரிந்த வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
  சென்னை :

  சென்னை வியாசர்பாடி சத்தியமூர்த்தி நகர் பகுதியில் நேற்று முன்தினம் இரவு வாலிபர் ஒருவர் கையில் கத்தி வைத்து கொண்டு பொதுமக்களை மிரட்டி கொண்டிருந்தார்.

  அப்போது அங்கிருந்த வாலிபர்கள் சிலர் அவரை மடக்கி பிடித்து, எம்.கே.பி நகர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற போலீஸ் இன்ஸ்பெக்டர் காளிராஜ் தலைமையிலான போலீசார் கத்தியுடன் சுற்றித்திரிந்த வாலிபரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.

  விசாரணையில், அந்த வாலிபர் அதே பகுதியை சேர்ந்த பிரகாஷ் (வயது 30) என்கிற வெள்ளை பிரகாஷ் என்பதும், இவர் மீது கொடுங்கையூர், வியாசர்பாடி, எம்.கே.பி நகர் உள்ளிட்ட போலீஸ் நிலையங்களில் கொலை முயற்சி உள்பட 20-க்கும் மேற்பட்ட வழக்குகள் இருப்பது தெரியவந்தது.

  இதையடுத்து அவரை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்த கத்தியை பறிமுதல் செய்தனர். பின்னர் அவரை ஜார்ஜ் டவுன் கோர்ட்டில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர். 
  Next Story
  ×