search icon
என் மலர்tooltip icon

    செய்திகள் (Tamil News)

    பெருங்குடியில் தீபாவளி சீட்டு நடத்தி ரூ.1 கோடி மோசடி- தம்பதி தலைமறைவு
    X

    பெருங்குடியில் தீபாவளி சீட்டு நடத்தி ரூ.1 கோடி மோசடி- தம்பதி தலைமறைவு

    சென்னை பெருங்குடியில் தீபாவளி சீட்டு நடத்தி ரூ.1 கோடி மோசடியில் ஈடுபட்டு தலைமறைவான கணவன், மனைவியை போலீசார் தேடி வருகின்றனர்.
    சோழிங்கநல்லூர்:

    சென்னை பெருங்குடி பகுதியைச் சேர்ந்தவர் கார்த்திக். மீன் வியாபாரி.

    அவர் மனைவி மற்றும் குடும்பத்துடன் 15 வருடங்களாக பெருங்குடி பகுதியில் வசித்து வந்தார்.

    கடந்த 3 வருடங்களாக தீபாவளி சீட்டு நடத்தி வந்தார். அவரிடம் பெருங்குடி மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளை சேர்ந்த 205 பேர் தீபாவளி சீட்டு போட்டு இருந்தனர்.

    அவர்களிடம் ரூ.1 கோடிக்கும் மேல் வசூல் செய்து இருந்தார். தீபாவளிக்கு முன்பு சீட்டுக்குரிய பொருட்கள் வாங்கி வருவதாக கூறி தனது குடும்பத்துடன் வெளியூர் சென்றார்.

    அதன் பின்னர் அவர் ஊர் திரும்பவில்லை. குடும்பத்துடன் தப்பி சென்று விட்டது தெரிய வந்தது. அதையடுத்து அவரிடம் பணம் செலுத்தி ஏமாந்தவர்கள் துரைப்பாக்கம் போலீசில் புகார் செய்துள்ளனர்.
    Next Story
    ×