search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பட்டேல் சிலைக்கு 3000 கோடி- கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 350 கோடியா? கனிமொழி
    X

    பட்டேல் சிலைக்கு 3000 கோடி- கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 350 கோடியா? கனிமொழி

    பட்டேல் சிலைக்கு 3000 கோடி, கஜா புயலால் பாதிக்கப்பட்ட 12 மாவட்ட தமிழர்களுக்கு 350 கோடியா? என்று கனிமொழி டுவிட்டரில் கேள்வியெழுப்பியுள்ளார். #Kanimozhi #GajaCyclone
    சென்னை:

    தி.மு.க. எம்.பி. கனிமொழி சென்னை விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-

    கஜா புயல் பிரச்சினை என்பது புதிய வி‌ஷயம் என்று சுப்பிரமணியசாமி சொல்லி இருப்பதை பெரிதாக எடுத்துக்கொள்ளக் கூடாது. தமிழ்நாட்டைப் பற்றி அவருக்கு என்ன தெரியும்.

    இங்கே இருக்கிற மக்கள் மற்றும் அவர்களின் பிரச்சினையை உணர்ந்தவர்கள் பேசலாம். இவர் பேசுவதை பெரிய வி‌ஷயமாக எடுத்துக் கொள்ளக்கூடாது.

    மேகதாது பகுதியில் அணை கட்டும் பிரச்சினை பற்றி பாராளுமன்றத்தில் குரல் எழுப்புவோம். மற்ற கட்சிகளின் ஆதரவையும் கோருவோம். மேகதாது பிரச்சினையை தி.மு.க. ஒரு முக்கியமான பிரச்சினையாக எடுத்துக் கொண்டு பாராளுமன்றத்தில் குரல் எழுப்பும். கஜா புயல் பாதிப்பு பற்றியும் குரல் எழுப்புவோம்.

    இந்நிலையில் உயிரற்ற பட்டேல் சிலைக்கு 3000 கோடியாம், உயிர்வாழ துடிக்கும் கஜா புயல் பாதிக்கப்பட்ட 12 மாவட்ட  தமிழர்களுக்கு 350 கோடியாம்! என தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.


    கஜா புயலால் ஏற்பட்ட மக்களின் பிரச்சினையை அரசு சரியாக புரிந்து கொள்ளவில்லை. அங்கிருக்கும் மக்கள் உணவு சமைக்கக் கூட முடியாத சூழல்கள் இருக்கின்றன. மின்சாரம், குடிநீர் இன்னும் கிடைக்கவில்லை. மக்களின் வாழ்வாதாரம் பாதிப்படைந்திருக்கிறது. இதெல்லாம் எத்தனை நாளில் சரியாகும் என்று அரசால் சொல்ல முடியவில்லை. இதை மத்திய அரசோ பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.

    இவ்வாறு அவர் பேசினார். #Kanimozhi #GajaCyclone
    Next Story
    ×