என் மலர்

  செய்திகள்

  இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு மு.க.ஸ்டாலின், டாக்டர் ராமதாஸ் வாழ்த்து
  X

  இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு மு.க.ஸ்டாலின், டாக்டர் ராமதாஸ் வாழ்த்து

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வாழ்த்து தெரிவித்துள்ளனர். #MKStalin #ISRO #PSLVC43 #PMKRamadoss
  சென்னை:

  தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

  புவி கண்காணிப்புக்கான ‘ஹைபர் ஸ்பெக்ட்ரல் இமேஜிங்’ செயற்கைகோள் உள்ளிட்ட 30 செயற்கைகோள்களை சுமந்து செல்லும் பி.எஸ்.எல்.வி. சி-43 ராக்கெட்டை வெற்றிகரமாக விண்ணில் ஏவிய இஸ்ரோவுக்கு என்னுடைய வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன். தொடர்ந்து இந்தியாவை பெருமைபடுத்துங்கள்.

  இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.  இதேபோல், பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

  பி.எஸ்.எல்.வி. சி-43 ஏவுகலன் மூலம் இந்தியாவின் ஹைசிஸ் உள்ளிட்ட 31 செயற்கைகோள்களை ஒரே நேரத்தில் புவி சுற்றுவட்டப் பாதையில் செலுத்தி சாதனை படைத்த இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு பாராட்டுகள். ஏவுகலன்களின் வேகத்திற்கு இணையான விண்வெளி ஆராய்ச்சியில் இந்தியாவின் சாதனைகளும் விண்ணைத் தொடுகின்றன.

  இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

  அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் துணைப் பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன், தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் ஆகியோரும் இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.  #MKStalin #ISRO #PSLVC43 #PMKRamadoss
  Next Story
  ×