என் மலர்
செய்திகள்

சங்கரன்கோவிலில் இளம்பெண்ணுக்கு கொலை மிரட்டல்- வாலிபர் கைது
சங்கரன்கோவிலில் இளம்பெண்ணை அவதூறாக பேசி கொலை மிரட்டல் விடுத்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.
சங்கரன்கோவில்:
சங்கரன்கோவில் அருகே உள்ள பெரிய கோவிலான்குளம் மேலத்தெருவை சேர்ந்தவர் முருகானந்தம் மனைவி ஆறுமுகத்தாய் (வயது 29). இதே பகுதியை சேர்ந்தவர் முத்துராஜ் மகன் அருள்ராஜ் (20). அருள்ராஜ் ஊரில் உள்ளவர்களிடம் ஆறுமுகத்தாய் பற்றி அவதூறாக கூறி வந்துள்ளார்.
இதனை ஆறுமுகத்தாய் தட்டி கேட்டுள்ளார். இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. வாக்குவாதம் முற்றவே ஆத்திரமடைந்த அருள்ராஜ் அவதூறாக பேசி ஆறுமுகத்தாயை தாக்கி கொலை மிரட்டல் விடுத்து விட்டு தப்பி சென்று விட்டார்.
இது குறித்து ஆறுமுகத்தாய் சின்னகோவிலான்குளம் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் அருள்ராஜை கைது செய்தனர்.
Next Story






