என் மலர்

  செய்திகள்

  நெல்லையில் கல்லூரி மாணவி திடீர் மாயம்
  X

  நெல்லையில் கல்லூரி மாணவி திடீர் மாயம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  நெல்லையில் கல்லூரிக்கு சென்ற மாணவி திடீரென மாயமானார். இது குறித்து அவரது தாய் போலீசில் புகார் செய்தார். போலீசார் மாணவியை தேடி வருகிறார்கள்.
  நெல்லை:

  நெல்லை டவுன் கோட்டையடி தெருவை சேர்ந்தவர் முருகன், தொழிலாளி. இவரது மகள் சுக்லாதேவி (வயது18). இவர் பாளையில் உள்ள தனியார் பயிற்சி கல்லூரியில் லேப் டெக்னீசியன் படித்து வந்தார். 

  கடந்த 23-ந்தேதி பயிற்சி கல்லூரிக்கு சென்ற சுக்லாதேவி அதன் பிறகு வீடு திரும்பவில்லை. உறவினர்கள் வீடு உள்பட பல்வேறு இடங்களில் தேடியும் அவரை பற்றிய தகவல்கள் கிடைக்க வில்லை. 

  இதைத்தொடர்ந்து அவரது தாயார் பார்வதி (48), நெல்லை டவுன் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் வேல்கனி மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாணவி சுக்லா தேவியை தேடி வருகிறார்கள்.
  Next Story
  ×