என் மலர்
செய்திகள்

ஆண்டிமடத்தில் தி.மு.க. சார்பில் பொதுமக்களுக்கு நிலவேம்பு குடிநீர்
ஆண்டிமடம் ஒன்றிய தி.மு.க. சார்பில் பொதுமக்கள், மற்றும் பள்ளி மாணவ,மாணவிகளுக்கு நிலவேம்பு குடிநீர் வழங்கப்பட்டது.
ஜெயங்கொண்டம்:
தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தலுக்கு இணங்க ஆண்டிமடம் ஒன்றிய தி.மு.க. சார்பில் ஆண்டிமடம் கடைவீதியில் பொதுமக்கள், மற்றும் பள்ளி மாணவ,மாணவிகளுக்கு மாவட்ட செயலாளர் சிவசங்கர் நிலவேம்பு குடிநீர் வழங்கினார்.
நிகழ்ச்சியில் ஒன்றிய பொறுப்பாளர்கள் தருமதுரை, முருகன், மாவட்ட மருத்துவ அணி துணை அமைப்பாளர் சேவியர் சஞ்சீவி குமார், மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளர் அழகர், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் லூயி கதிரவன், மாவட்ட விவசாய தொழிலாளர் அணி துணை அமைப்பாளர் அறிவழகன்,
மாவட்ட தொண்டரணி துணை அமைப்பாளர் ஆபிரகாம், ஒன்றிய பொறுப்புக்குழு உறுப்பினர்கள் சிவஜோதி, உதயகுமார், தனசேகரன், ஊராட்சி செயலாளர்கள் குணசேகரன், முத்துக்குமாரசாமி, திருநாவுக்கரசு, செல்வகுமார், வெங்கடேசன், நாராயணசாமி, கோவிந்தராஜ், ஒன்றிய மாணவரணி அமைப்பாளர் செந்தில், பாலா, வேல்முருகன், சதீஷ்குமார், மாணவரணி துணை அமைப்பாளர்கள் ஜெயராஜ். பிரதீப், தொமுச. நிர்வாகி கொளஞ்சி மற்றும் மாவட்ட ஒன்றிய நகர நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
Next Story






