என் மலர்
செய்திகள்

மலேசியாவில் இருந்து வந்த விமானத்தில் டி.வி.-சார்ஜரில் மறைத்து ரூ. 18 லட்சம் தங்கம் கடத்தல்
மலேசியாவில் இருந்து வந்த விமானத்தில் டி.வி.-சார்ஜரில் மறைத்து கடத்திய ரூ.18 லட்சம் தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். #chennaiairport #goldseized
ஆலந்தூர்:
மலேசியாவில் இருந்து சென்னைக்கு நேற்று இரவு பயணிகள் விமானம் வந்தது. அதில் வந்த பயணிகளிடம் சுங்கத் துறை அதிகாரிகள் சோதனை செய்தனர்.
அப்போது சென்னையை சேர்ந்த 2 வாலிபர்களின் நடவடிக்கையில் அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. அவர்களை தனி அறைக்கு அழைத்துசென்று, அவர்கள் கொண்டு வந்திருந்த பொருட்களை ஆய்வு செய்தனர்.
இதில் எல்.இ.டி. டி.வி மற்றும் சார்ஜரில் மறைத்து வைத்து 600 கிராம் தங்க கட்டி கடத்தி வந்திருப்பது தெரிந்தது. இதன் மதிப்பு ரூ. 18 லட்சம் ஆகும்.
இதையடுத்து தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். தங்கம் கடத்தலில் பின்னணியில் உள்ளவர் குறித்து பிடிபட்ட 2 வாலிபர்களிடமும் விசாரணை நடந்து வருகிறது.
Next Story






