search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சென்னையில் 605 இடங்களில் கொசு நோய் பரப்பியதாக ரூ.24 லட்சம் அபராதம்
    X

    சென்னையில் 605 இடங்களில் கொசு நோய் பரப்பியதாக ரூ.24 லட்சம் அபராதம்

    சென்னையில் கொசு நோய் பரப்ப காரணமாக இருந்ததாக 605 இடங்களுக்கு ரூ.24 லட்சம் அபராதம் விதித்து மாநகராட்சி அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது. #ChennaiCorporation #MosquitoDisease
    சென்னை:

    சென்னையில் கொசு நோய் பரப்ப காரணமாக இருந்ததாக 605 இடங்களுக்கு மாநகராட்சி ரூ.24 லட்சம் அபராதம் விதித்து மாநகராட்சி அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.

    சென்னையில் டெங்கு காய்ச்சல் பரவுவதை தடுக்க மாநகராட்சி அதிரடி நடவடிக்கை எடுத்து வருகிறது.

    மாநகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள வீடுகள், காலி இடங்களில் மாநகராட்சி சுகாதாரத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து வருகிறார்கள்.

    சென்னை மாநகராட்சியில் உள்ள 15 மண்டலங்களில் கடந்த 3 மாதங்களில் நடத்தப்பட்ட ஆய்வில் 605 இடங்கள் கொசு நோய் பரப்ப காரணமாக இருந்ததாக கண்டறியப்பட்டுள்ளது. காலி இடங்களில் கழிவு நீர் தேக்கம், கொசு உற்பத்தி, டெங்கு காய்ச்சல் நோய் பரப்ப காரணமாக இருந்தது கண்டறியப்பட்டது.

    கொசு, நோய் பரப்ப காரணமாக இருந்த 605 இடங்களுக்கு மாநகராட்சி சுகாதாரத்துறை அதிகாரிகள் ரூ.24.45 லட்சம் அபராதம் விதித்து நடவடிக்கை எடுத்துள்ளனர்.

    திரு.வி.க.நகர், அம்பத்தூர், கோடம்பாக்கம் உள்ளிட்ட மண்டலங்களில் உள்ள வார்டுகளில் 45 வாகனங்களில் கொசுமருந்து, புகையடித்து கொசுக்கள் உற்பத்தியாவதை தடுக்க மாநகராட்சி நடவடிக்கை எடுத்துள்ளது.

    இது குறித்து மண்டல அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

    சென்னை மாநகராட்சி மண்டல பகுதிகளில் உள்ள வார்டுகளில் சுகாதார ஆய்வாளர்கள் தலைமையில் ஆய்வு பணிகள் செய்து டெங்கு காய்ச்சல் நோய் தடுப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. வீடுகளில் தண்ணீர் தேங்கும் இடங்கள் தண்ணீர் தொட்டிகளில் கொசு முட்டைகள் உற்பத்தியாகாமல் தடுக்க மருந்துகள் தெளிக்கப்பட்டு வருகிறது. வீடுகள், தெருக்களில் கொசு மருந்து, புகை அடிக்கப்படுகிறது.



    அக்டோபர் மாதம் மட்டும் 325 இடங்கள் கொசுக்கள் உற்பத்திக்கு காரணமாக இருந்தது கண்டறியப்பட்டு ரூ.12.34 லட்சம் அபராதமாக வசூலிக்கப்பட்டது.

    அம்பத்தூர் பகுதியில் 2 ஆயிரம் தொழிற்சாலைகள் உள்ளன. அப்பகுதியில் கொசுக்கள் உற்பத்தியாகாமல் தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    கொசுக்கள் உற்பத்திக்கு காரணமாக இருந்த தொழிற்சாலைக்கு தலா ரூ.10 ஆயிரம் முதல், 50 ஆயிரம் வரை அபராதம் மாநகராட்சி சார்பில் வசூலிக்கப்பட்டுள்ளது.

    காலி இடங்களில் பழைய டயர்கள், குப்பைகள், கழிவுகள் அகற்ற மாநகராட்சி நடவடிக்கை எடுத்துள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார். #ChennaiCorporation #MosquitoDisease

    Next Story
    ×