என் மலர்tooltip icon

    செய்திகள்

    பலியான எஸ்தர்கிங்
    X
    பலியான எஸ்தர்கிங்

    இரணியல் அருகே பன்றி காய்ச்சலுக்கு அழகு கலை பெண் நிபுணர் பலி

    குமரி மாவட்டம் இரணியல் அருகே பன்றி காய்ச்சலுக்கு அழகு கலை பெண் நிபுணர் பலியானார்.
    இரணியல்:

    இரணியல் அருகே உள்ள கண்டன்விளை பகுதியைச் சேர்ந்தவர் ஜோசப் கிங் (வயது 50). டாஸ்மாக் கடையில் கண்காணிப்பாளராக பணியாற்றுகிறார்.

    இவரது மனைவி எஸ்தர் கிங் (46). இவர் வீட்டில் இருந்தபடியே அழகு கலை நிபுணராக பணியாற்றி வந்தார்.

    எஸ்தர் கிங் கடந்த ஒரு வாரமாக காய்ச்சலால் அவதிப்பட்டார். அவரை நாகர்கோவிலில் தனியார் ஆஸ்பத்திரியில் அனு மதித்தனர். அங்கு அவரது ரத்தம் பரிசோதனை செய்யப்பட்டது. அப்போது அவரை பன்றிக்காய்ச்சல் தாக்கியிருப்பது தெரிய வந்தது.

    இதையடுத்து நேற்று எஸ்தர் கிங்கை உறவினர்கள் திருவனந்தபுரத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்று சிகிச்சை அளித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று நள்ளிரவு அவர் இறந்தார்.

    ஏற்கனவே குமரி மாவட்டத்தில் பன்றிகாய்ச்சலுக்கு நாகர்கோவிலைச் சேர்ந்த ஓய்வு பெற்ற பேராசிரியர் தெரசா, தக்கலை பருத்தி விளையைச் சேர்ந்த 7 மாத கர்ப்பிணி சுகன்யா, தெங்கம் புதூரைச் சேர்ந்த வக்கீல் ரவீச்சந்திரன், தக்கலை திருவிதாங்கோடு புதுப்பள்ளி பகுதியைச் சேர்ந்த சக்ரியா உள்ளிட்டோர் பலியாகி இருந்தனர்.

    இந்தநிலையில் கண்டன் விளையைச் சேர்ந்த எஸ்தர் கிங் பலியானதால் பலி எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது.

    தற்போது ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் உள்ள சிறப்பு வார்டில் பன்றிகாய்ச்சலால் பாதிக்கப்பட்ட 12 பேர் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். பெண்கள் 5 பேரும், குழந்தைகள் 5 பேரும் என மொத்தம் 12 பேர் சிகிச்சை பெறுகிறார்கள். அவர்களில் சிலர் குணம் அடைந்து இன்று வீடு திரும்ப உள்ளதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

    இதேபோல தனியார் ஆஸ்பத்திரிகளிலும் பன்றிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் சிகிச்சை பெறுகிறார்கள். இதேபோல மாவட்டம் முழுவதும் ஒருவிதமான வைரஸ் காய்ச்சலும் வேகமாக பரவி வருகிறது. இந்த காய்ச்சல் 3 நாட்களுக்குள் குணம் அடைந்தாலும் உடல் வலி, சோர்வு 10 நாட்களுக்கும் மேலாக நீடிப்பதாக பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்தனர். #swineflu
    Next Story
    ×