என் மலர்

  செய்திகள்

  திருமண ஆசை காட்டி பிளஸ்-2 மாணவிகளை கடத்திய வாலிபர்கள்
  X

  திருமண ஆசை காட்டி பிளஸ்-2 மாணவிகளை கடத்திய வாலிபர்கள்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  திருமண ஆசை காட்டி பிளஸ்-2 மாணவிகளை கடத்தி சென்ற வாலிபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

  ஒட்டன்சத்திரம்:

  ஒட்டன்சத்திரம் அருகில் உள்ள காவேரியம்மாபட்டியை சேர்ந்த மாரிமுத்து மகன் கவிபிரியா (வயது17), காப்பிளிய பட்டியை சேர்ந்த பிச்சை முத்து மகள் கவுரி (17). இவர்கள் 2 பேரும் ஒட்டன்சத்திரம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்து வருகின்றனர்.

  சம்பவத்தன்று பள்ளிக்கு சென்ற மாணவிகள் வீடு திரும்பவில்லை. அவர்களது பெற்றோர் பல இடங்களில் தேடி பார்த்தும் கிடைக்க வில்லை.

  இதனால் ஒட்டன்சத்திரம் போலீஸ் நிலையத்தில் கவிபிரியாவின் தந்தை மாரிமுத்து புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் திருமண ஆசை காட்டி மாணவிகளை 2 வாலிபர்கள் கடத்தி சென்றது தெரியவந்தது.

  பெரியகோட்டையை சேர்ந்த சூர்யா (19), மகேந்திரன் (19) ஆகிய 2 பேரும் பஸ்சில் ஒட்டன்சத்திரம் வந்தபோது மாணவிகளிடம் பழகி வந்துள்ளனர்.

  பின்னர் காதலிப்பதாக கூறினர். இந்த சூழ்நிலையில் திருமண ஆசை காட்டி அவர்களை சென்னைக்கு கடத்தி சென்றது விசாரணையில் தெரிய வந்துள்ளது. போலீசார் அவர்களை தேடி வருகின்றனர்.

  Next Story
  ×