என் மலர்

  செய்திகள்

  சேலம் அரசு ஆஸ்பத்திரியில் மர்ம காய்ச்சலுக்கு பெண் பலி
  X

  சேலம் அரசு ஆஸ்பத்திரியில் மர்ம காய்ச்சலுக்கு பெண் பலி

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  சேலம் அரசு ஆஸ்பத்திரியில் மர்ம காய்ச்சலால் அவதிப்பட்டு வந்த பெண் சிகிச்சை பலன் அளிக்காமல் பரிதாபமாக இறந்தார்.
  ராசிபுரம்:

  நாமக்கல் மாவட்டம் அத்தனூர் 5 ரோடு  பகுதியை சேர்ந்தவர் முத்துசாமி. இவரது மனைவி அங்காயி (வயது 68). இவருக்கு கடந்த 5 நாட்களுக்கு முன்பு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டது. அந்த பகுதியில் உள்ள ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்றும் குணமாகவில்லை. 

  இதையடுத்து அங்காயி சேலம் அரசு ஆஸ்பத்திரியில் பன்றி காய்ச்சல் வார்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் 2 நாட்களாக சிகிச்சை அளித்தும், அங்காயி உடல்நிலையில் எந்த முன்னேற்றமும் இல்லாமல் இருந்தது. மேலும் நேற்று இரவு முதல் காய்ச்சல் பாதிப்பும் அதிகமானது.

  இந்த நிலையில் இன்று காலை அங்காயி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதைபார்த்த உறவினர்கள் கதறி அழுதனர். மேலும் அத்தனூர் பகுதியில் பரவும் மர்ம காய்ச்சலை தடுக்க சுகாதாரத் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த பகுதியினர் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
  Next Story
  ×