என் மலர்

  செய்திகள்

  தக்கலை அருகே மதுவில் வி‌ஷம் கலந்து தொழிலாளி தற்கொலை
  X

  தக்கலை அருகே மதுவில் வி‌ஷம் கலந்து தொழிலாளி தற்கொலை

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  தக்கலை அருகே கடன் பிரச்சினை காரணமாக மதுவில் வி‌ஷம் கலந்து குடித்து தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்.

  தக்கலை:

  தக்கலையை அடுத்த திருவிதாங்கோடு, அண்ணா நகர் காலனியை சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது 42). கூலி தொழிலாளி.

  செந்தில் குமாருக்கு திருமணமாகி லதா என்ற மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர். இவர் கடன் தொல்லையால் அவதிப்பட்டு வந்தார். இதனால் குடும்பத்திலும் பிரச்சினை இருந்து வந்தது.

  இந்த நிலையில் செந்தில்குமார் மது பழக்கத்திற்கும் அடிமையானார். இதற்கு மனைவி லதா எதிர்ப்பு தெரிவித்தார். இதனால் அவர்களுக்கு இடையேயும் பிரச்சினை ஏற்பட்டது.

  இந்நிலையில் நேற்று செந்தில்குமார் மனைவியுடன் தகராறு செய்துவிட்டு அருகில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றார். அங்கு இரவு தங்கினார். நள்ளிரவில் அவர் வாயில் நுரை தள்ளியபடி மயங்கி கிடப்பதை கண்ட உறவினர்கள் இது பற்றி செந்தில்குமாரின் மனைவியிடம் தெரிவித்தனர். அவர் விரைந்து வந்து செந்தில் குமாரை தக்கலை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், செந்தில் குமார் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

  இது பற்றி செந்தில் குமாரின் மனைவி தக்கலை போலீசில் புகார் செய்தார். போலீசார் செந்தில் குமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

  இதில் அவர் மதுவில் வி‌ஷம் கலந்து கடித்து தற்கொலை செய்திருப்பது தெரியவந்தது. இது பற்றி போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

  Next Story
  ×