என் மலர்

  செய்திகள்

  கொருக்குப்பேட்டையில் பள்ளி அருகே பேப்பர் குடோனில் தீ விபத்து
  X

  கொருக்குப்பேட்டையில் பள்ளி அருகே பேப்பர் குடோனில் தீ விபத்து

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  கொருக்குப்பேட்டையில் பள்ளி அருகே பேப்பர் குடோனில் ஏற்பட்ட தீ விபத்து தொடர்பாக கட்டிட உரிமையாளர் மற்றும் பேப்பர் குடோன் வைத்தவரிடம் விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்துள்ளனர். #FireAccident
  ராயபுரம்:

  கொருக்குப்பேட்டை, தியாகப்ப செட்டித் தெருவில் பழைய பேப்பர் குடோன் உள்ளது.

  இதன் அருகிலேயே அரசு உதவி பெறும் நடு நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு 300-க் கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகிறார்கள்.

  இன்று காலை 8 மணியளவில் மாணவ-மாணவிகள் பள்ளிக்கு வந்து கொண்டு இருந்தனர். அப்போது பேப்பர் குடோனில் இருந்த கரும்புகை வெளியேறியது. சிறிது நேரத்தில் தீ மளமளவென குடோன் முழுவதும் பற்றி எரிந்தது.

  இதனால் அருகில் இருந்த பள்ளிக்குள் கரும்புகை பரவியது. இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த மாணவ- மாணவிகள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.

  தகவல் அறிந்ததும் தண்டையார்பேட்டை, கொருக்குப்பேட்டை, வியாசர்பாடியில் இருந்து 3 வண்டிகளில் தீயணைப்பு வீரர்கள் வந்தனர்.

  குடோன் இருந்த தெரு மிகவும் குறுகலாக இருந்ததால் தீயணைப்பு வாகனத்தை அருகில் கொண்டு செல்வதில் சிரமம் ஏற்பட்டது.

  தீயணைப்பு வீரர்கள் குடோனின் ‌ஷட்டர், ஜன்னல்களை உடைத்து உள்ளே புகுந்தனர். பின்னர் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

  சுமார் 3 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். எனினும் குடோனில் இருந்த பேப்பர் பண்டல்கள், பொருட்கள் முற்றிலும் எரிந்து நாசமானது.

  தீயின் தாக்கம் காரணமாக கரும்புகை, வெப்பம் அருகில் இருந்த பள்ளிக்கும் பரவியதால் உடனடியாக பள்ளிக்கு விடுமுறை விடப்பட்டது. மாணவ-மாணவிகள் பத்திரமாக வெளியே அனுப்பி வைக்கப்பட்டனர்.

  தீ விபத்து பற்றி அறிந்ததும் மாணவ-மாணவிகளின் பெற்றோரும், பொதுமக்களும் ஏராளமானோர் அங்கு திரண்டனர். இதனால் அப்பகுதி பரபரப்பாக காணப்பட்டது.

  இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறும்போது, “பள்ளி அருகே பேப்பர் குடோன் அமைக்க எதிர்ப்பு தெரிவித்தும் சம்பந்தப்பட்டவர்கள் கண்டு கொள்ளவில்லை. பள்ளிக்கும் தீ பரவி இருந்தால் விபரீதம் ஏற்பட்டு இருக்கும்.

  பள்ளிக்குள் செல்லும் மாணவ - மாணவிகள் குடோன் அருகில் உள்ள குறுகலான பாதை வழியாகவே சென்று வருகிறார்கள். தீ முழுவதும் பற்றி எரிந்து இருந்தால் மாணவர்கள் வெளியே வர முடியாத நிலையும் உருவாகி இருக்கும். அதிர்ஷ்டவசமாக அவர்கள் தப்பி உள்ளனர்” என்றனர்.

  தீ விபத்துக்கான காரணம் என்ன என்று தெரியவில்லை. இது தொடர்பாக கொருக்குப்பேட்டை போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

  இதற்கிடையே தீ விபத்தில் தப்பிய பள்ளியை கல்வி அதிகாரிகள் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

  இது தொடர்பாக கட்டிட உரிமையாளர் மற்றும் பேப்பர் குடோன் வைத்தவரிடம் விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்துள்ளனர்.
  Next Story
  ×