என் மலர்
செய்திகள்

செய்யாறில் கல்லூரி மைதானத்தில் தீக்குளித்த மாணவர் பலி
செய்யாறு அரசு கலைக்கல்லூரி மைதானத்தில் தீக்குளித்த மாணவர் சிகிச்சை பலனின்றி இறந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
செய்யாறு:
செய்யாறு டவுன் நேருநகர் பகுதியை சேர்ந்தவர் சுரேஷ், அரசு பஸ் கண்டக்டர். இவரது மகன் அஸ்வின்குமார் (20). பூந்தமல்லி அருகே உள்ள என்ஜினியரிங் கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வந்தார்.
சமீபத்தில் நடந்த தேர்வில் சரியாக எழுதவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்து காணப்பட்டார்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் ஒரு பாட்டிலில் பெட்ரோல் எடுத்து கொண்டு செய்யாறு அண்ணா கலைக்கல்லூரி மைதானத்துக்கு சென்றார். அங்கு வைத்து தனது உடலில் மண்எண்ணை ஊற்றி தீக்குளித்தார்.
மைதானத்தில் வாக்கிங் சென்ற பொதுமக்கள் இதனை பார்த்து திடுக்கிட்டனர். அஸ்வின்குமார் உடலில் பற்றி எரிந்த தீயை அணைத்தனர்.
அவரை செய்யாறு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் கீழ்பாக்கம் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அஸ்வின்குமார் இறந்தார்.
செய்யாறு டவுன் போலீசார் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். #tamilnews

Next Story