என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கோலாகலமாக கொண்டாடப்படும் தீபாவளி திருநாள் - ஆளுநர், முதல்வர் வாழ்த்து
Byமாலை மலர்6 Nov 2018 5:54 AM GMT (Updated: 6 Nov 2018 5:54 AM GMT)
தீபாவளி பண்டிகை மிகவும் கோலாகலமாக கொண்டாப்பட்டு வரும் நிலையில், முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர். #Diwali #TNCM #EdappadiPalaniswami #BanwarilalPurohit #TNGovernor
சென்னை:
இந்து மதத்தின் மிக முக்கிய பண்டிகைகளில் ஒன்றான தீபாவளி இந்துக்கள் மட்டுமின்றி, இந்தியாவின் அனைத்து மதங்களும் கொண்டாடும் பொதுவான பண்டிகையாக திகழ்கிறது. இந்த தீபாவளி திருநாளில் புத்தாடை உடுத்தி, வெடி வெடித்து உறவினர்களிடமும், பெற்றோரிடமும் ஆசி பெறுவது வழக்கம்.
இந்த வருடம் தீபாவளியில் வெடி வெடிப்பதற்கு உச்சநீதிமன்றம் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. 2 மணி நேரம் மட்டுமே வெடி வெடிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
அதனை மறுபரிசீலனைக்கு கோரிய தமிழக அரசின் மனு நிராகரிக்கப்பட்டு, அதற்கு பதிலாக 2 மணி நேரம் என்பதை நிர்ணயிக்கும் அதிகாரத்தை அரசுக்கு உச்சநீதிமன்றம் அளித்தது. இதையடுத்து, காலை 6 முதல் 7 மணி வரையும், மாலை 7 முதல் 8 மணி வரையிலும் வெடி வெடிக்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.
உத்தரவை மீறி வெடி வெடிப்பவர்களுக்கு, 6 மாதம் வரை சிறை தண்டனை அளிக்கப்படும் என தமிழக காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால் பட்டாசு விற்பனை சில இடங்களில் மந்தமடைந்தது.
இருப்பினும், இன்று தீபாவளி திருநாள் அனைவராலும் கோலாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. குறிப்பிட்ட நேரத்தில் வெடி வெடித்தும், பலகாரங்களை மத வேறுபாடு இன்றி பகிர்ந்தும் மக்கள் சிறப்பாக கொண்டாடி வருகின்றனர்.
இந்த தீபாவளி திருநாளுக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். அவரது வாழ்த்து செய்தியில், ஒளியின் திருநாள் இந்த தீபாவளி நாள் என்றும், நாடு முழுவதும் உள்ள மக்கள் மேல தாளத்துடன் கோலாகலமாக இந்த பண்டிகையை கொண்டாட வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதே போல், முதல்வர் எடப்பாடி பழனிசாமி தனது வாழ்த்து செய்தியில், நரகாசுரனை வதம் செய்த நாளை கொண்டாடும் தீபாவளி அன்று, மகிழ்ச்சியும், செழிப்பும் வந்து சேரட்டும் என குறிப்பிட்டுள்ளார். இதேபோல், துணை முதல்வர் ஓ.பி.எஸ், டிடிவி தினகரன், அன்புமணி ராமதாஸ் போன்ற பல்வேறு தலைவர்களும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். #Diwali #TNCM #EdappadiPalaniswami #BanwarilalPurohit #TNGovernor

Next Story
×