search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    புதிய கட்சி தொடங்க சந்திரபாபு நாயுடுவிடம் ஆலோசனைகளை கேட்கும் ரஜினிகாந்த்
    X

    புதிய கட்சி தொடங்க சந்திரபாபு நாயுடுவிடம் ஆலோசனைகளை கேட்கும் ரஜினிகாந்த்

    புதிய கட்சி தொடங்க நடிகர் ரஜினிகாந்த் சமீபகாலமாக ஆந்திர முதல் அமைச்சர் சந்திரபாபு நாயுடுவின் ஆலோசனைகளை கேட்டு வருவதாக கூறப்படுகிறது. #Rajinikanth #ChandrababuNaidu

    சென்னை:

    ரஜினிகாந்த் கடந்த தீவிர அரசியலுக்கு வருவதாக அறிவித்து கட்சி தொடங்குவதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறார். ரசிகர் மன்றத்தை மக்கள் மன்றமாக மாற்றி கட்சிக்கான அடிப்படை கட்டமைப்பை உருவாக்கி வருகிறார். கட்சிக்கான 90 சதவீத பணிகள் முடிந்து விட்டதாக சமீபத்தில் அளித்த பேட்டியில் தெரிவித்தார்.

    ரஜினி நடிப்பில் ‌ஷங்கர் இயக்கத்தில் உருவாகி இருக்கும் 2.0 படத்தின் டிரெய்லர் வெளியீட்டு நிகழ்ச்சி பேசும்போது ’லேட்டா வந்தாலும் கரெக்டா வரணும். வந்தா நிச்சயமாக அடிக்கவேண்டும். நமது வெற்றி நிர்ணயிக்கப்பட்ட ஒன்று’ என்று பேசிவிட்டு ‘நான் படத்தை சொன்னேன்’ என்று பரபரப்பை ஏற்படுத்தினார்.

    ஆனால் அவர் அரசியலை தான் குறிப்பிட்டார் என்று அனைவருக்கும் தெரியும். அவர் பதுங்கிப்பாய்கிறார் என்று அரசியல் நோக்கர்கள் கருதுகிறார்கள்.

    ரஜினி சமீபகாலமாக ஆந்திர முதல் அமைச்சர் சந்திரபாபு நாயுடுவின் ஆலோசனைகளை கேட்டு வருவதாக கூறப்படுகிறது. இதுகுறித்து ரஜினி தரப்பில் விசாரித்த போது அவர்கள் கூறியதாவது:-

    ரஜினிக்கும் சந்திரபாபு நாயுடுவுக்கும் எப்போதுமே நல்ல நட்பு இருந்து வருகிறது. என்.டி.ராமராவ் சிவபார்வதி திருமணத்திற்கு பிறகுதான் கட்சியை உடைத்து கொண்டு வெளியே வந்தார் சந்திரபாபு நாயுடு. பிறகு கட்சியும் ஆட்சியும் சந்திரபாபு நாயுடு வசமானது.


    அப்போது ரஜினி ஐதராபாத் சென்று நாயுடுவை சந்தித்துப் பேசினார். நாயுடுவுக்கு ஆதரவாக ரஜினியிடம் இருந்து ஒரு அறிக்கையும் வந்தது. அந்த சமயத்தில் ரஜினி நடித்த பெத்தராயுடு படம் தெலுங்கில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருந்ததால் ரஜினியின் அறிக்கை முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்பட்டது. அந்த நட்புதான் இன்றுவரை தொடர்கிறது. ஆந்திராவில் சந்திரபாபு நிகழ்த்திவரும் மக்கள் நல திட்டங்களுக்கு நாடு முழுவதுமே நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.

    ரஜினி சந்திரபாபு நாயுடுவிடம் அடிக்கடி பேசி கட்சி தொடர்பாக ஆலோசனைகள் கேட்டுக்கொள்கிறார். முக்கியமாக கட்சியின் அடிப்படை கொள்கைகள், நோக்கங்கள், ஆட்சிக்கு வரும்போது கொண்டு வர வேண்டிய நலத்திட்டங்கள், தேர்தல் அறிக்கைகள் மற்றும் வாக்குறுதிகள் ஆகியவற்றுக்கான ஆலோசனைகள் கேட்டுக்கொள்கிறார்.

    கட்சி தொடங்குவதை வெறும் கட்சி அறிவிப்பாக மட்டுமே வெளியிட ரஜினி விரும்பவில்லை. பதிலாக இந்த வி‌ஷயங்கள் அனைத்தையும் சேர்த்தே வெளியிட தயாராகிறார்.

    ரஜினியின் அரசியல் அறிவிப்பு வந்த உடனேயே அவரது கொள்கைகள் பற்றி கேள்விகளும், விமர்சனங்களும் எழுந்தன. கட்சி அறிவிப்பின்போது அப்படி எதுவும் வந்து விடாமல் இருக்க கவனமாக அடியெடுத்து வைக்கிறார். ரஜினி சந்திரபாபு நாயுடுவின் ஆலோசனைகளை கேட்பது என்பது பாஜகவுக்கு தான் கோபத்தை ஏற்படுத்தும். ஆனால் ரஜினி அதைப்பற்றி கவலைப்படவில்லை

    இவ்வாறு அவர்கள் கூறினார்கள். #Rajinikanth #ChandrababuNaidu 

    Next Story
    ×