என் மலர்
செய்திகள்

வடகிழக்கு பருவமழை தொடங்கியது - தேனி மாவட்டத்தில் விடிய விடிய மழை
வடகிழக்கு பருவமழை தொடங்கியதையடுத்து தேனி மாவட்டத்தில் விடிய விடிய மழை பெய்தது. #NortheastMonsoon
கூடலூர்:
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை இன்று முதல் தொடங்கும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் கேரளாவில் இதற்கான அறிகுறி நேற்று தென்பட்டது. கேரளாவில் பெய்த பலத்தமழை காரணமாக தமிழக கேரள எல்லையில் அமைந்துள்ள தேனி மாவட்டத்திலும் விடிய விடிய மழை பெய்தது. கடந்த சில நாட்களாக வறட்சியான சூழ்நிலையே நிலவி வந்தது. தற்போது வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளது.
பெரியாறு அணையின் நீர் மட்டம் தொடர்ந்து சரிந்து வந்தது. வடகிழக்கு பருவமழை காரணமாக அணைக்கு நீர் வரத்து அதிகரிக்க தொடங்கியுள்ளது. நேற்று காலை 882 கன அடியாக இருந்த நீர் மட்டம் இன்று காலை 1,268 கன அடியாக அதிகரித்தது. அணையின் நீர் மட்டம் 133 அடியாக உள்ளது. அணையில் இருந்து பாசனத்துக்காக வினாடிக்கு 1,990 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. நீர் இருப்பு 5,399 மில்லியன் கன அடியாக உள்ளது.
இதே போல் வைகை அணை நீர் மட்டம் தொடர்ந்து 69 அடியிலேயே உள்ளது. அணைக்கு வரும் 2,220 கன அடி நீர் முழுவதும் வெளியேற்றப்படுகிறது. மஞ்சளாறு அணையின் நீர் மட்டம் 53.65. வரத்து 20 கன அடி. திறப்பு 100 கன அடி. சோத்துப்பாறை நீர் மட்டம் 126.11 அடி. வரத்து 27 கன அடி. திறப்பு 30 கன அடி.
பெரியாறு 17.6, தேக்கடி 40.6, கூடலூர் 6.8, சண்முகாநதி அணை 23, உத்தமபாளையம் 9.6, வீரபாண்டி 5 மி.மீ மழை அளவு பதிவாகியுள்ளது. #NortheastMonsoon

Next Story