search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    டிஎஸ்பி விஷ்ணுபிரியா தற்கொலை வழக்கு 15-ந்தேதிக்கு ஒத்திவைப்பு
    X

    டிஎஸ்பி விஷ்ணுபிரியா தற்கொலை வழக்கு 15-ந்தேதிக்கு ஒத்திவைப்பு

    கோவை கோர்ட்டில் நடைபெற்று வந்த டி.எஸ்.பி.விஷ்ணுபிரியா தற்கொலை வழக்கில் சிபிஐக்கு கால அவகாசம் வழங்கி விசாரணையை வரும் 15-ந்தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார். #DSPVishnupriya #CBI
    கோவை:

    நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் டி.எஸ்.பி.யாக பணியாற்றியவர் விஷ்ணுபிரியா. இவர் 2015-ம் ஆண்டு செப்டம்பர் 18-ந்தேதி முகாம் அலுவலகத்தில் தூக்கு போட்ட நிலையில் பிணமாக மீட்கப்பட்டார்.

    உயர் அதிகாரிகளின் அழுத்தம் காரணமாக விஷ்ணுபிரியா தற்கொலை செய்து கொண்டதாக புகார் செய்யப்பட்டது. இந்த வழக்கை சி.பி.ஐ. விசாரணை நடத்தியது. பல கட்ட விசாரணைக்கு பின்னர் இந்த வழக்கில் குற்றவாளிகள் யாரும் இல்லை எனவும், இந்த வழக்கை கைவிடுவதாகவும் கோவை தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் சி.பி.ஐ. கடந்த ஏப்ரல் 16-ந்தேதி அறிக்கை தாக்கல் செய்தது.



    சி.பி.ஐ. அறிக்கைக்கு டி.எஸ்.பி. விஷ்ணுபிரியாவின் தந்தை ரவி எதிர்ப்பு தெரிவித்தார். மீண்டும் வழக்கை விசாரிக்க வலியுறுத்தினார்.

    இதனையடுத்து இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. நீதிபதி நடராஜன் வழக்கை விசாரித்தார். அப்போது சி.பி.ஐ. தரப்பில் கால அவகாசம் கேட்கப்பட்டது. நீதிபதி கால அவகாசம் வழங்கி விசாரணையை வரும் 15-ந்தேதிக்கு ஒத்தி வைத்தார்.

    மேலும் இந்த வழக்கில் மேலும் அவகாசம் வழங்க முடியாது என்றும் உத்தரவிட்டார். #DSPVishnupriya #CBI

    Next Story
    ×