search icon
என் மலர்tooltip icon

    செய்திகள் (Tamil News)

    அறந்தாங்கி அருகே அரசு பஸ் கண்ணாடியை உடைத்த வாலிபர் கைது
    X

    அறந்தாங்கி அருகே அரசு பஸ் கண்ணாடியை உடைத்த வாலிபர் கைது

    அறந்தாங்கி அருகே பேருந்தை விட்டு கீழே இறக்கியதால் ஆத்திரம் அடைந்த வாலிபர் பஸ் கண்ணாடியை உடைத்துள்ளார். இது குறித்த புகாரின் பேரில் போலீசார் அவரை கைது செய்தனர்.
    அறந்தாங்கி:

    புதுக்கோட்டை மாவட்டம் மண மேல்குடியைச் சேர்ந்தவர் நீலகண்டன் (வயது 21). இவரது மனைவி நந்தினி (வயது 20). நேற்று இவர்கள் இருவரும் அறந்தாங்கியில் இருந்து ஏம்பல் செல்லும் அரசு பேருந்தில், நந்தினியின் பெற்றோர் ஊரான குண்டக வயலுக்கு புறப்பட்டனர். 

    மது குடித்துவிட்டு போதையில் இருந்த நீலகண்டன் அவரது மனைவி நந்தினியை பேருந்திற்குள் வைத்து தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளார். இதனால் பேருந்தில் இருந்த பயணிகள் முகம் சுளித்தனர். இதைத் தொடர்ந்து துரையரசபுரம் அருகே பேருந்து ஓட்டுனர் காளிமுத்து பேருந்தை நிறுத்தி நீலகண்டனையும், அவரது மனைவி நந்தினியையும் பேருந்தை விட்டு கீழே இறக்கி விட்டார். 

    இதில் ஆத்திரமடைந்த நீலகண்டன் பேருந்து ஓட்டுனரை தகாத வார்த்தைகளால் திட்டியதுடன், பேருந்தின் கண்ணாடியையும் உடைத்துள்ளார். இதுகுறித்து பேருந்து ஓட்டுனர் காளிமுத்து, ஆவுடையார்கோவில் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் பேருந்து கண்ணாடியை உடைத்ததாக நீலகண்டனை கைது செய்தனர். 
    Next Story
    ×