என் மலர்

  செய்திகள்

  மழைநீரில் பள்ளிக்கு சைக்கிளில் செல்லும் மாணவி.
  X
  மழைநீரில் பள்ளிக்கு சைக்கிளில் செல்லும் மாணவி.

  ஸ்ரீவில்லிபுத்தூரில் வீடுகளுக்குள் மழை நீர் புகுந்ததால் பொதுமக்கள் அவதி

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியில் பெய்த கன மழையால் வீடுகளுக்குள் மழை நீர் புகுந்தது. இதனால் பொதுமக்கள் பெரிதும் அவதியடைந்தனர்.
  விருதுநகர்:

  விருதுநகர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக மேற்கு தொடர்ச்சி மலையையொட்டியுள்ள ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பெய்யும் தொடர் மழையால் கண்மாய், குளங்கள் உள்ளிட்ட நீர்நிலைகளில் தண்ணீர் மட்டம் உயர்ந்து வருகிறது. ராஜபாளையம் மக்களின் குடிநீர் ஆதாரமாக விளங்கும் 6-வது மைல் குடிநீர் தேக்க ஏரியும் நிரம்பி வருகிறது.

  ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியில் பெய்த மழையால் ரைட்டான்பட்டி ஓடையில் சென்ற மழைநீர் அங்குள்ள அருந்ததியர் குடியிருப்புகளில் புகுந்தது. 50-க்கும் மேற்பட்ட வீடுகளில் தண்ணீர் புகுந்ததால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்தனர். மழைநீர் புந்தது குறித்து அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

  நேற்றும் மழை பெய்ததால் வீடுகளுக்குள் புகுந்த தண்ணீர் வடியவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் 50-க்கும் மேற்பட்டோர் இன்று காலை திருவண்ணாமலை மெயின் ரோட்டில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார், அதிகாரிகள் அங்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். இதன்பின்பு மறியல் கைவிடப்பட்டது.

  மறியலால் அந்த பகுதியில் ½ மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. விருதுநகர், சாத்தூர், சிவகாசி ஆகிய பகுதிகளில் இன்று அதிகாலை ஒரு மணி நேரத்துக்கும் மேலாக பலத்த மழை பெய்தது. சிவகாசியில் ஒரு வாரமாக பெய்து வரும் மழையால் பட்டாசு ஆலையில் உற்பத்தி பாதிக்கப்பட்டு உள்ளது. #tamilnews
  Next Story
  ×