என் மலர்
செய்திகள்

திருவல்லிக்கேணியில் ஆட்டோ டிரைவருக்கு அரிவாள் வெட்டு
திருவல்லிக்கேணியில் ஆட்டோ டிரைவரை அரிவாளால் வெட்டிய இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை:
திருவல்லிக்கேணி பகுதியில் ஆட்டோ ஓட்டி வருபவர்கள் மதியழகன், கோபிநாத், இவர்கள் இருவருக்கும் இடையே சவாரி ஏற்றுவது தொடர்பாக பிரச்சினை இருந்து வந்தது.
இந்த நிலையில் கோபி நாத்தும் அவரது நண்பர் பார்த்தசாரதி என்பவரும் சேர்ந்து மதியழகனை அரிவாளால் வெட்டினர். இதில் காயம் அடைந்த அவரை மீட்டு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு மதியழகனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
Next Story






