என் மலர்

  செய்திகள்

  மீன்பிடிக்கும் போது கிணற்றில் தவறி விழுந்து சிறுவன் பலி
  X

  மீன்பிடிக்கும் போது கிணற்றில் தவறி விழுந்து சிறுவன் பலி

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  அரவக்குறிச்சி அருகே மீன்பிடிக்கும் போது கிணற்றில் தவறி விழுந்து சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
  அரவக்குறிச்சி:

  கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி அருகே உள்ள பள்ளப்பட்டி புதுப்பட்டாணி தெருவை சேர்ந்தவர் அப்துல்ரகுமான். இவரது  மகன் யாசர் அராபத்(வயது 9). அங்குள்ள பள்ளியில் 4-ம்வகுப்பு படித்து வந்தான். நேற்று பள்ளி விடுமுறையை அடுத்து வீட்டில் இருந்து வெளியே சென்றான். அதன்பிறகு அவன் வீடு திரும்பவில்லை. 

  இந்த நிலையில் நங்கஞ்சி பகுதியில் உள்ள கிணற்றின் அருகே யாசர் அராபத்தின் செருப்பு மற்றும் மீன் பிடிக்கக்கூடிய தூண்டில்கள் கிடந்தது. இது குறித்த தகவல் அறிந்ததும் உறவினர்கள் மற்றும் அரவக்குறிச்சி போலீசார் அங்கு சென்று பார்வையிட்டனர். 

  அப்போது கிணற்றுக்குள் யாசர்அராபத் இறந்து கிடந்தான். இதையடுத்து சம்பவ இடத்திற்கு தீயணைப்பு நிலைய வீரர்கள்   வரவழைக்கப்பட்டு உடல் மீட்கப்பட்டது. கிணற்றில் மீன்பிடிக்கும் போது யாசர் அராபத் தவறி விழுந்து இறந்திருக்கலாம் என போலீசார் கருதுகின்றனர். இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
  Next Story
  ×