என் மலர்

  செய்திகள்

  பர்மா பஜார் கடைகளுக்கு ‘சீல்’ வைக்கப்பட்டுள்ளதா?- ஐகோர்ட்டு கேள்வி
  X

  பர்மா பஜார் கடைகளுக்கு ‘சீல்’ வைக்கப்பட்டுள்ளதா?- ஐகோர்ட்டு கேள்வி

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  திருட்டு சி.டி. விற்பனை செய்யும் பர்மா பஜார் கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளதா? என்று ஐகோர்ட்டு கேள்வி எழுப்பியுள்ளது. #chennaiHighcourt

  சென்னை:

  சென்னை பத்ரியன் தெருவில் உள்ள மொத்த பூ விற்பனை கடைகளுக்கு ‘சீல்’ வைத்து இழுத்து மூட ஐகோர்ட்டு நீதிபதி சுப்பிரமணியம் உத்தர விட்டார். அதனடிப்படையில், 139 பூக் கடைகளுக்கு ‘சீல்’ வைக்கப்பட்டன. இதையடுத்து, தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் பூ வியாபாரிகள் மேல் முறையீடு செய்தனர்.

  இந்த மேல்முறையீட்டு வழக்கை நீதிபதிகள் கே.கே.சசிரதன், ஆர்.சுப்பிரமணியன் ஆகியோர் விசாரித்து வருகின்றனர். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது, மொத்த பூ வியாபாரிகளை தான் அப்புறப்படுத்த ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

  ஆனால், சில்லரை பூ வியாபாரிகளையும் அதிகாரிகள் விரட்டுகின்றனர் என்று அவர்கள் தரப்பில் ஆஜரான வக்கீல் கூறினார்.

  அப்போது நீதிபதிகள், ‘மொத்த பூ வியாபாரிகளின் கடைகளுக்கு மட்டும் தான் ‘சீல்’ வைக்கப்பட்டதா? அல்லது பூக்கடை பகுதியில் உள்ள பூக்கடை போலீஸ் நிலையத்துக்கும் ‘சீல்’ வைத்து விட்டனரா?’ என்று நகைச்சுவையாக கூறினர்.

  பின்னர், ‘சில்லரை வியாபாரிகளை அப்புறப்படுத்த வேண்டும் என்றால், அவர்களுக்கு முதலில் நோட்டீசு அனுப்ப வேண்டுமே? அவ்வாறு நோட்டீசு அனுப்பப்பட்டதா?. அப்படியே திருட்டு சி.டி.க்கள் விற்பனை செய்யும் பர்மா பஜாரில் உள்ள கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டதா? என்று கேள்வி எழுப்பினர்.

  பின்னர், இந்த வழக்கு விசாரணையை பிற்பகலுக்கு தள்ளி வைத்தனர். #chennaiHighcourt

  Next Story
  ×