என் மலர்

  செய்திகள்

  மலைச்சாமி
  X
  மலைச்சாமி

  மேலூர் தொகுதி திமுக முன்னாள் எம்எல்ஏ மலைச்சாமி மரணம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  மதுரை மாவட்டம் மேலூர் தொகுதி தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. மலைச்சாமி உடல்நலக்குறைவால் இன்று மரணம் அடைந்தார். #DMK #Malaiasamy
  மதுரை:

  மதுரை மாவட்டம், மேலூர் அருகே உள்ள சாணிப்பட்டியைச் சேர்ந்தவர் சா.பெ.மலைச்சாமி (வயது 85). இவர் பேரறிஞர் அண்ணா தி.மு.க.வை தொடங்கியதில் இருந்து கட்சியில் தீவிரமாக பணியாற்றினார்.

  அண்ணாவின் பாராட்டை பெற்ற மலைச்சாமி ஒருங்கிணைந்த மேலூர் தொகுதியில் 1969-ம் ஆண்டு சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார்.

  பின்னர் கருணாநிதி தலைமையிலான தி.மு.க.விலும் மேலூர் தொகுதியில் இருந்து எம்.எல்.ஏ.வாக தேர்வு செய்யப்பட்டார்.

  வயதான மலைச்சாமி உடல் நலக்குறைவு காரணமாக வீட்டில் இருந்து சிகிச்சை பெற்று வந்தார். சில நாட்களாக அவருக்கு தீவிர உடல்நலக்குறைவு ஏற்பட்டது.

  இதனால் மதுரையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட மலைச்சாமிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இருப்பினும் சிகிச்சை பலனின்றி இன்று காலை மலைச்சாமி மரணம் அடைந்தார்.

  அவரது உடல் சொந்த ஊரான சாணிப்பட்டிக்கு கொண்டு செல்லப்பட்டு பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. கிராம மக்கள் மற்றும் தி.மு.க. நிர்வாகிகள் இறுதி அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.

  மரணம் அடைந்த மலைச்சாமிக்கு பாக்கியலட்சுமி என்ற மனைவியும், 3 மகன்கள், ஒரு மகள் உள்ளனர்.

  மூத்த மகன் இளவரசன் நடிகராகவும், 2-வது மகன் சீராளன் திரைப்படத்துறையிலும், 3-வது மகன் வெற்றிசெல்வன் அரசு அதிகாரியாகவும் பணிபுரிந்து வருகிறார்கள். #DMK #Malaiasamy
  Next Story
  ×