search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பண்ருட்டி அருகே மாணவியை பாலியல் பலாத்காரம் செய்து வாட்ஸ்-அப்பில் அனுப்பிய காதலன் கைது
    X

    பண்ருட்டி அருகே மாணவியை பாலியல் பலாத்காரம் செய்து வாட்ஸ்-அப்பில் அனுப்பிய காதலன் கைது

    குளிர் பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து மாணவியை பாலியல் பலாத்காரம் செய்ததை தொடர்ந்து அதை வீடியோ எடுத்து வாட்ஸ்-அப்பில் அனுப்பிய காதலனை போலீசார் கைது செய்தனர்.
    பண்ருட்டி:

    கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள வீரப்பாரை பகுதியை சேர்ந்தவர் நீலமேகம். இவரது மகன் சதீஷ் (20). இவருக்கும், அந்த பகுதியில் உள்ள பள்ளியில் படிக்கும் 9-ம் வகுப்பு மாணவிக்கும் இடையே பழக்கம் ஏற்பட் டது.

    அவர்களது பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. இதைத்தொடர்ந்து 2 பேரும் பல்வேறு இடங்களுக்கு சென்று தங்களது காதலை வளர்த்து வந்தனர்.

    இந்த நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் 14-ந் தேதி மாணவிக்கு குளிர்பானத்தில் மயக்க மருந்தை கலந்து கொடுத்தார். பின்னர் மாணவியை பள்ளி வளாகத்தில் உள்ள கழிவறைக்கு அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்தார்.

    அதை செல்போன் மூலம் மாணவிக்கு தெரியாமல் வீடியோவாக பதிவு செய்தார். அந்த வீடியோ பதிவை வாட்ஸ்-அப் மூலம் தங்களது நண்பர்களுக்கு சதீஷ் அனுப்பி வைத்ததாக கூறப்படுகிறது.

    வாட்ஸ்-அப் வீடியோ அந்தபகுதிகளில் உள்ள பல்வேறு நபர்களுக்கு பரவியது. இந்த நிலையில் வாட்ஸ்-அப் வீடியோ பற்றிய தகவல் அந்த மாணவியின் பெற்றோருக்கு தெரிய வந்தது.

    உடனே இந்த சம்பவம் குறித்து மாணவியிடம் அவரது பெற்றோர் விசாரித்தனர். நடந்த சம்பவத்தை தெரிவித்தார். இதைத்தொடர்ந்து மாவட்ட குழந்தைகள் நலக்குழுமத்தின் தலைவர் ஜெயந்தி ரவிச்சந்திரனுக்கு மாணவியின் பெற்றோர் தகவல் தெரிவித்தனர்.

    உடனே அவர் பாதிக்கப்பட்ட மாணவியை நேரில் அழைத்து விசாரித்தார். அதனை தொடர்ந்து மருத்துவ பரிசோதனைக்காக கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு மாணவி அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டது. பின்னர் கடலூரில் உள்ள மகளிர் காப்பகத்தில் மாணவி தங்க வைக்கப்பட்டுள்ளார்.

    இது தொடர்பாக பண்ருட்டி அனைத்து மகளிர் போலீசில் ஜெயந்தி ரவிச்சந்திரன் புகார் செய்தார். இதையொட்டி போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து சதீசை தேடிவந்தனர். இந்த நிலையில் நேற்று சதீஷ் கைது செய்யப்பட்டார்.

    பின்னர் பண்ருட்டி கோர்ட்டில் சதீஷ் ஆஜர்படுத்தப்பட்டார். வழக்கை நீதிபதி கணேஷ் விசாரித்து சதீஷை 15 நாள் காவலில் வைக்க உத்தரவிட்டார். அதனை தொடர்ந்து கடலூர் சிறையில் சதீஷ் அடைக்கப்பட்டார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    Next Story
    ×