என் மலர்

  செய்திகள்

  தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை நிச்சயமாக அமைக்கப்படும்- தம்பிதுரை பேட்டி
  X

  தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை நிச்சயமாக அமைக்கப்படும்- தம்பிதுரை பேட்டி

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை நிச்சயமாக அமைக்கப்படும். நாடாளு மன்றத்தில் அறிவிக்கப்பட்ட இத்திட்டம் எக்காரணம் கொண்டும் நிறுத்தி வைக்கப்படாது என்று தம்பிதுரை கூறினார். #thambidurai #aimshospital

  கோவை:

  பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை இன்று கோவை விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது கூறியதாவது:-

  தமிழர்களின் மாபெரும் தலைவர் எம்.ஜி.ஆர். என்றென்றும் மக்கள் மனதில் எம்.ஜி.ஆர் நிலைத்திருக்கிறார் என்பதை எடுத்துக்காட்டும் நிகழ்ச்சியாக நூற்றாண்டு நிறைவு விழா அமையும். தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்து வமனை நிச்சயமாக அமைக்கப்படும். நாடாளுமன்றத்தில் அறிவிக்கப்பட்ட இத்திட்டம் எக்காரணம் கொண்டும் நிறுத்தி வைக்கப்படாது.

  விவசாயிகளை பாதிக்கும் எந்த திட்டத்தையும் ஏற்க மாட்டோம். ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து நாடாளு மன்றத்தில் குரல் கொடுப்போம். தமிழக நலனையும், தமிழக விவசாயிகள் நலனையும் பாதுகாக்கும் இயக்கமாக அ.தி.மு.க. இருக்கும். 2014 நாடாளுமன்ற தேர்தலை போல, வருகின்ற நாடாளுமன்ற தேர்தலிலும் அ.தி.மு.க. தனித்து போட்டியிடும். கூட்டணி என்பது தேர்தல் நேரத்தில் பேசுவது என்ற முதல்-அமைச்சர், துணை முதல்-அமைச்சர் கருத்தில் எனக்கு கருத்து வேறுபாடு கிடையாது. அதே சமயம் 40 நாடாளுமன்ற தொகுதிகளிலும் போட்டியிடும் வலிமை அ.தி.மு.க.வுக்கு உள்ளது.

  இவ்வாறு அவர் கூறினார்.


  அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைக்க பாரதீய ஜனதா முயற்சி செய்கிறதா என்ற கேள்விக்கு, அது எனக்கு தெரியாது. மத்திய இணை அமைச்சர் பொன்.ராதா கிருஷ்ணனிடம் தான் கேட்க வேண்டும். மக்கள் யார் பக்கம் இருக்கிறார்கள் என்பது அனைவருக்குமே தெரியும். தமிழகத்தில் திராவிட கட்சிகளை தவிர்த்து, தேசிய கட்சிகளுக்கு இடமில்லை என்றார். #thambidurai #aimshospital

  Next Story
  ×