என் மலர்

  செய்திகள்

  தி.மு.க. செய்த செலவில் 10 சதவீதம்கூட எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவுக்கு செய்யவில்லை - ஜெயக்குமார் பேட்டி
  X

  தி.மு.க. செய்த செலவில் 10 சதவீதம்கூட எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவுக்கு செய்யவில்லை - ஜெயக்குமார் பேட்டி

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  செம்மொழி மாநாட்டுக்காக தி.மு.க. செய்த 200 கோடி ரூபாய் செலவில் 10 சதவீதம் கூட எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவுக்கு நாங்கள் செய்யவில்லை என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். #TNministerJayakumar #MKStalin #MGRcentenaryexpenses
  சென்னை:

  தமிழ்நாட்டில் உள்ள 31 மாவட்டங்களில் தமிழ்நாடு அரசு சார்பில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டது. நிறைவாக, சென்னையில் நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. திடலில் இன்று பிரமாண்ட விழா அரசு சார்பில் நடைபெற்று வருகிறது.

  தமிழக எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையிலும், சென்னையில் உள்ள எம்.எல்.ஏ.க்களில் ஒருவர் என்ற முறையிலும்  தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இவ்விழா அழைப்பிதழில் அவரது பெயர் இடம் பெற்றிருக்கிறது. ஆனால் இந்த விழாவில் பங்கேற்க மாட்டேன் என மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

  இதுதொடர்பாக, தனது டுவிட்டர் பக்கத்தில் நேற்று அவர் வெளியிட்ட பதிவில், 'மக்கள் வரிப்பணத்தில் ஆடம்பரமாகவும், போக்குவரத்துக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் சாலையெங்கும் பேனர்கள் வைத்தும், எதிர்க்கட்சிகளை வசைபாடும் விழாவாக அரசின் பெயரில் அரசியல் லாபத்துக்காக நடைபெற்று வரும் ‘எம்.ஜி.ஆர்’ நூற்றாண்டு விழாவில் கலந்து கொள்வதில் எனக்கு உடன்பாடில்லை’ என்றும் ஸ்டாலின் தெரிவித்திருந்தார்.  இந்நிலையில், சென்னையில் நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. திடலில் இன்று நடைபெற்றுவரும் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் பங்கேற்க வந்த தமிழ்நாடு மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமாரிடம் ஸ்டாலின் தெரிவித்த கருத்து தொடர்பாக செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

  அதற்கு பதிலளித்த ஜெயக்குமார், கடந்த 2010-ம் ஆண்டில் அவர்கள் ஆட்சியின்போது செம்மொழி மாநாட்டுக்காக தி.மு.க. செய்த 200 கோடி ரூபாய் செலவில் 10 சதவீதம் கூட எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவுக்காக நாங்கள் செய்யவில்லை என தெரிவித்தார். #TNministerJayakumar #MKStalin #MGRcentenaryexpenses
  Next Story
  ×