என் மலர்
செய்திகள்

அப்பல்லோ மருத்துவமனையில் இருந்து ஸ்டாலின் டிஸ்சார்ஜ்
சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சிகிச்சைக்குப் பிறகு இன்று மதியம் டிஸ்சார்ஸ் செய்யப்பட்டார். #DMK #MKStalin #ApolloHospital
சென்னை:
தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலினுக்கு நேற்று இரவு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து அவர் இரவு 11.30 மணிக்கு ஆயிரம் விளக்கு அப்பல்லோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவருக்கு டாக்டர்கள் உடனடியாக சிகிச்சை அளித்தனர்.

இந்த நிலையில் இன்று காலை மு.க.ஸ்டாலினுக்கு சிறிய அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அவரது வலது கால் தொடையில் சிறிய அறுவை சிகிச்சை செய்யப்பட்டு, தொடையில் இருந்த நீர்க்கட்டி அகற்றப்பட்டதாகவும், பிற்பகல் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்றும் மருத்துவமனை நிர்வாகம் செய்தி வெளியிட்டது. அதன்படி இன்று பிற்பகல் ஸ்டாலின் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.
ஓரிரு நாட்கள் ஓய்வு எடுக்கும்படி ஸ்டாலினுக்கு டாக்டர்கள் அறிவுறுத்தியுள்ளனர். அதன்பின்னர் வழக்கமான கட்சிப் பணிகளில் ஈடுபடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. #DMK #MKStalin #ApolloHospital

சிறுநீரக தொற்று பாதிப்பு காரணமாக மு.க.ஸ்டாலின் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு இருப்பதாக முதலில் தகவல் வெளியானது. அவரது உடல்நிலை சீராக இருப்பதாகவும் டாக்டர்கள் தெரிவித்தனர்.

Next Story