search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வடகிழக்கு பருவமழையால் சென்னையில் 250 இடங்கள் பாதிக்கும் அபாயம் - அமைச்சர் உதயகுமார்
    X

    வடகிழக்கு பருவமழையால் சென்னையில் 250 இடங்கள் பாதிக்கும் அபாயம் - அமைச்சர் உதயகுமார்

    வடகிழக்கு பருவமழையால் சென்னையில் 250 இடங்கள் மழை வெள்ளத்தால் பாதிக்கும் அபாயம் உள்ளதாக அமைச்சர் உதயகுமார் கூறினார். #NortheastMonsoon #MinisterUdayakumar
    சென்னை:

    வடகிழக்கு பருவ மழை தொடங்க உள்ள நிலையில் முன் எச்சரிக்கை நடவடிக்கை குறித்து அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

    இந்த ஆண்டு தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை இயல்பான மழையளவில் பெய்யக் கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    மழை வெள்ளத்துக்கு 4399 பகுதிகள் பாதிக்கும் என்று கண்டறியப்பட்டுள்ளது. இதில் சென்னையில் மட்டும் 250 இடங்கள் பாதிக்கும் பகுதிகளாக உள்ளன. இந்த பகுதிகளில் மேற்கொள்ள வேண்டிய முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து தகுந்த அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன.

    8417 நீர் நிலை ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டுள்ளன. 6,534 பாலங்களின் அடைப்புகள் அகற்றப்பட்டுள்ளன.

    7,256 தடுப்பணைகள் புதிதாக உருவாக்கப்பட்டுள்ளது. பாதிப்புக்குள்ளாகும் பகுதிகளில் குடிநீர் பயன்பாட்டிற்கான கால்வாய்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளது.



    வடகிழக்கு பருவ மழை தொடங்குவதற்கு முன்பாக நீர்நிலைகளை தூர்வாருதல், கரைகளை பலப்படுத்துதல் போன்ற நடவடிக்கைகள் குடிமராமத்து மற்றும் மகாத்மா காந்தி ஊரக வேலை வாய்ப்புத் திட்டங்களின் மூலம் செயல்படுத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

    நீர் நிலைகளில் உள்ள வண்டல் மண்ணை தூர்வாரி, விவசாயிகளுக்கு இலவசமாக வழங்குவதோடு மட்டுமல்லாமல் நிலத்தடி நீரை அதிகப்படுத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    தடுப்பணைகள் கட்டுவதற்கான இடங்களை இந்த மாத இறுதிக்குள் தேர்வு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார். #NortheastMonsoon #MinisterUdayakumar
    Next Story
    ×