என் மலர்
செய்திகள்

அர்ஜுனா விருது பெறும் தமிழக வீரர் சத்யன் ஞானசேகரனுக்கு முதலமைச்சர் பழனிசாமி வாழ்த்து
அர்ஜூனா விருது வென்ற தமிழக டேபிள் டென்னிஸ் வீரர் சத்யன் ஞானசேகரனுக்கு தமிழக முதலமைச்சர் எடப்பாடி ப்ழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார். #ArjunaAward #SathiyanGnanasekaran #EdappadiPalaniswami
சென்னை:
மத்திய அரசால் ஆண்டுதோறும் விளையாட்டுத் துறையில் சிறந்த விளங்கும் வீரர்களுக்கு அர்ஜூனா விருது வழங்கி கவுரவிப்பது வழக்கம். இந்த விருதுக்கான பெயரை அந்தந்த விளையாட்டு சங்கங்கள் மத்திய விளையாட்டுத்துறை அமைச்சகத்திற்கு பரிந்துரை செய்யும். வீரர்களின் செயல்பாட்டை ஆராய்ந்து மத்திய அமைச்சகம் மத்திய அரசுக்கு பரிந்துரை செய்யும்.
தமிழக வீரர் சத்யன் ஞானசேகரன், ஹீமா தாஸ், ஸ்மிருதி மந்தனா உள்பட பல்வேறு வீரர், வீராங்கனைகளுக்கு அர்ஜூனா விருது வழங்க மத்திய அரசுக்கு விளையாட்டுத்துறை அமைச்சகம் சமீபத்தில் பரிந்துரை செய்துள்ளது.
இதற்கிடையே, தமிழக டேபிள் டென்னிஸ் வீரர் சத்யன் ஞானசேகரனுக்கு அர்ஜுனா விருது வழங்கப்படும் என விளையாட்டு துறை அமைச்சகம் இன்று அறிவித்துள்ளது.

இந்நிலையில், அர்ஜூனா விருது பெறும் தமிழக டேபிள் டென்னிஸ் வீரர் சத்யன் ஞானசேகரனுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழக டேபிள் டென்னிஸ் வீரர் சத்யன் ஞானசேகரன் மேலும் பல வெற்றிகளை குவித்து சாதனை சிகரங்களை தொட அன்பான வாழ்த்துக்கள் என குறிப்பிட்டுள்ளார். #ArjunaAward | #SathiyanGnanasekaran #EdappadiPalaniswami

Next Story