என் மலர்tooltip icon

    செய்திகள்

    பெண் கல்விக்கு முக்கியத்துவம் கொடுத்து குழந்தைகளை வளர்க்க வேண்டும் - நீதிபதி பேச்சு
    X

    பெண் கல்விக்கு முக்கியத்துவம் கொடுத்து குழந்தைகளை வளர்க்க வேண்டும் - நீதிபதி பேச்சு

    பெண்கள் கல்விக்கு முக்கியத்துவம் கொடுத்து குழந்தைகளை வளர்க்க வேண்டும் என்று நீதிபதி சிந்துமதி அறிவுரை கூறினார்.
    வாடிப்பட்டி:

    மத்திய சிறுபான்மையினர் நலத்துறை மற்றும் வாடிப்பட்டி கிரட் தன்னார்வ தொண்டு நிறுவனம் இணைந்து சிறுபான்மையினர் பெண்களுக்கு தலைமைத் துவ பயிற்சி முகாமை நடத்தின. வாடிப்பட்டி குற்றவியல் நீதிமன்ற நீதிபதி சிந்துமதி தலைமை தாங்கி தொடங்கி வைத்தார்.

    மாதர்களாய் பிறப்பதற்கு மாதவம் செய்யவேண்டும் என்றும் மாதர்தம்மை இழிவுசெய்யும் மடமையை கொளுத்துவோம் என்றும் புரட்சிகவி பாரதியார் பெண்மையின் பெருமை பற்றி பாடி பெண் அடிமை விலங்கை உடைத்தெரிய கவிதைகள் மூலம் பாடுபட்டார்.

    அதனால் பெண்கள் கல்விக்கு முக்கியத்துவம் கொடுத்து குழந்தைகளை வளர்க்க வேண்டும். சாதிப்பதற்கும், வயதுக்கும் சம்பந்தமில்லை. எந்த வயதில் வேண்டுமானாலும் சாதனை செய்யலாம்.

    சுயசிந்தனை, தன்னம்பிக்கை,பொறுமை இவைகளை குழந்தைகளுக்கு கற்று கொடுங்கள் அது அவர்களின் வாழ்க்கையில் வெற்றிக் கனியை பெற்றுத்தரும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    முகாமில் திருமணசட்டங்கள்mபற்றி வழக்கறிஞர் செல்வராஜ், குடும்ப நல ஆலோசகர் டாக்டர் கண்மணி பாலியல் பாகுபாடுகளில் பெண்களின் நிலை பற்றி பேசினார். இதில் குடும்ப நலம், ஊட்டச்சத்து முறைகள், குழந்தைகள் நலம் மற்றும் தடுப்பூசி முறைகள், பெண்ணுரிமை கல்வி, பெண்களுக்கு எதிரான வன்முறைகள், தன்சுத்தம் குடும்ப கட்டுபாட்டு முறைகள், சுற்றுப்புற சுகாதாரம், அரசு நலத்திட்டங்கள் பற்றி கலந்துரையாடல்களும், குழு விவாதங்களும் நடந்தன.
    Next Story
    ×