search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    செங்கோட்டை அருகே காட்டு யானைகள் மீண்டும் அட்டகாசம்- நெற்பயிர்களை சேதப்படுத்தியது
    X

    செங்கோட்டை அருகே காட்டு யானைகள் மீண்டும் அட்டகாசம்- நெற்பயிர்களை சேதப்படுத்தியது

    செங்கோட்டை அருகே மேற்குத் தொடர்ச்சி மலையடிவார பகுதியில் நுழைந்த யானைகள் ஒரு ஏக்கரில் பயிர்களை மிதித்து சேதப்படுத்தியது.
    செங்கோட்டை:

    செங்கோட்டை அருகே மேற்குத் தொடர்ச்சி மலையடிவார பகுதியில் சமீப காலமாக காட்டு யானைகள் அட்டகாசம் செய்து வருகின்றன. வனத்துறையினர் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து காட்டுக்குள் விரட்டினாலும் மீண்டும் மீண்டும் யானை கூட்டம் அடிவாரத்துக்குள் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி வருகிறது.

    ஏற்கனவே கடந்த சில மாதங்களுக்கு முன்பு வடகரை பகுதியில் வயலுக்குள் புகுந்து வாழை, தென்னை மரங்களை சேதப்படுத்தின. இந்த நிலையில் இன்று காலையில் அடவிநயினார் அணைக்கட்டு அருகேயுள்ள சம்பு ஓடை பகுதிக்குள் 3 காட்டு யானைகள் புகுந்தன. இப்பகுதியில் விவசாயிகள் ஏராளமான ஏக்கரில் நெல்பயிர் சாகுபடி செய்துள்ள‌னர்.
     
    இந்த தோட்டங்களுக்குள் நுழைந்த யானைகள் ஒரு ஏக்கரில் பயிர்களை மிதித்து சேதப்படுத்தியது. உடனே அப்பகுதி விவசாயிகள் அங்கு திரண்டு யானைகளை காட்டுக்குள் விரட்டியடித்தனர். இதுபற்றி விவசாயிகள் கூறுகையில்,” காட்டு யானை கூட்டங்கள் கடந்த 8 மாதமாக இரவு நேரங்களில் தோட்டத்துக்குள் புகுந்து தென்னை, வாழை பயிர்களை நாசம் செய்து வருகின்றன. யானைகளை வனப் பகுதிக்குள் விரட்ட பல மாதங்கள் கோரிக்கை விடுத்தும், இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை. இது தொடர் கதையாக உள்ளது. எனவே உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும். செங்கோட்டை பகுதியில் தொடரும் யானைகள் அட்டகாசத்துக்கு வனத்துறையினர் நிரந்த‌ர தீர்வு காணவேண்டும்“ என்றனர்.  #tamilnews
    Next Story
    ×